லண்டன் நகருக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பிணங்கள் மீட்கப்பட்ட சம்பவம் உலகையே அதிரவைத்தது. முதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியான நிலையில், பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
வெளிநாடு போற ஆசையில தப்பான பாதையில போயிட்டேன் அம்மா... கண்டெய்னரில் கதறிய மகள்...
லண்டன் நகருக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பிணங்கள் மீட்கப்பட்ட சம்பவம் உலகையே அதிரவைத்தது. முதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியான நிலையில், பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் நகரில் உள்ள கிரேஸ் தொழிற்பேட்டைக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து, திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அதில் 8 பெண்கள் உட்பட 39 பேரின் உறைந்து போன சடலங்கள் காணப்பட்டன. 39 சடலங்களையும் மீட்ட போலீசார், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த அயர்லாந்தைச் சேர்ந்த ராபின்சன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உலக நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தில் தினமும் புதிது புதிதாக அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.
கண்டெய்னர் லாரியும், கைது செய்யப்பட்ட ஓட்டுநரும் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் உயிரிழந்தவர்கள் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் மீட்கப்பட்ட 39 சடலங்களும் சீனாவைச் சேர்ந்தவர்களுடையது என போலீசார் முதற்கட்ட தகவலை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அனைவரையும் அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. வியட்நாமில் இருந்து இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 39 பேர் கண்டெய்னர் லாரிக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு இளைஞர் மற்றும் 3 பெண்கள் வியட்நாமைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கண்டெய்னர் லாரியின் கதவு மற்றும் உட்புறத்தில் ரத்தம் தோய்ந்த கைரேகைகளைக் கண்ட போலீசார் அதிர்ச்சியில் திகிலடைந்துள்ளனர். அதன் மூலம் சிறிதும் இடைவெளியின்றி இறுக்கமாக மூடப்பட்டிருந்த கண்டெய்னரில் பயணம் செய்த 39 பேரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது கண்டெய்னர் லாரிக்குள் பயணம் செய்த 39 பேரும் மூச்சு விட முடியாமல் திண்டாடியுள்ளனர். தவை திறக்கக்கோரி கண்டெய்னரின் உட்புறம் முழுவதும் தங்களது கைகளால் பலமாக தட்டியுள்ளனர். அப்போது உயிருக்கு போராடிய அவர்கள், கையில் ரத்தம் வரும் வரை தட்டியது தான் கண்டெய்னர் உட்புறத்தில் படிந்துள்ள ரத்தக்கரைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிலர் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துள்ளனர், அதனால் தான் அதிலும் ரத்தக்கரைகள் படிந்துள்ளன.
இறுதியில் நம்மை யாரும் காப்பாற்ற போவதில்லை என்பதை உணர்ந்த 39 பேரும், மூச்சுத்திணறி கடும் சிரமங்களை அனுபவித்து, கொடூரமாக உயிரிழந்துள்ளனர். அதில் பாம் தாய் ட்ரே மை என்ற 26 பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் நகர வேதனையை அனுபவித்த ட்ரெ மை, தனது தாய்க்கு அனுப்பிய குறுச்செய்தி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மூச்சுத்திணறி உயிரிழக்க போகிறேன் அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள், உங்களை நேசிக்கிறேன் என தனது இறுதி நேர போராட்டத்தின் போதும் குறுச்செய்தி அனுப்பியுள்ளார். இந்த நெஞ்சை உறுக்கும் குறுச்செய்தியை கண்ட இங்கிலாந்து போலீசார், 39 பேரின் சடலங்களை அடையாளம் காணும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.