அடித்த அடியில் அலறி துடித்த அமெரிக்கா...!! முரட்டு தாக்குதலில் மிரட்டும் ஈரான்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2020, 12:51 PM IST
Highlights

இதற்கு பதிலடியாக அமெரிக்கப்  படைகளின் அல்ல ஆசாத்  விமான தளம்மீது  ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது . 
 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாப அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது .   கடந்த சில மாதங்களாக அமெரிக்க ராணுவம் ஈராக்கில் இருந்தவாறு  ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது .  முதலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் ,  ஈரான் புரட்சி படையின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார் .  இதற்கு பதிலடியாக அமெரிக்கப்  படைகளின் அல்ல ஆசாத்  விமான தளம்மீது  ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது . 

இந்நிலையில் ஈரான் அமெரிக்கா இடையே போர்  மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,  ஆனாலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறது .   ஈரானின் ஏவுகணை தாக்குதலால் சுமார் 100 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது .  ஆனால் அமெரிக்கா அதை முற்றிலுமாக மறுத்ததுடன் ,  ராணுவ வீரர்களுக்கு உயிர் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை,   ஆனால் ஏவுகணை தாக்குதலால் அவர்கள்  மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்தது .   இந்நிலையில் ஈரான் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகம் மீதும் தாக்குதல் நடத்துவதைபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது.

 

இதில்  அமெரிக்கா விலகி விலகி சென்றாலும் ஈரான் தொடர்ந்து தாக்கிவருகிறது ,  ஈராக்கில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே ஈரான் 2   ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது .  ஈராக்கின்  பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது .  இந்நிலையில் ஈரான்  தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக  தற்போது அமெரிக்க ராணுவம் வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!