ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு: அடுத்து என்ன நடக்கும்? புதிய அதிபர் யார்?

By Manikanda Prabu  |  First Published May 20, 2024, 1:11 PM IST

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பதவியில் இருக்கும் அதிபர் உயிரிழந்தால் அந்நாட்டில் அடுத்து என்ன நடக்கும்


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் அந்நாட்டு மூத்த அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், இப்ராஹிம் ரைசி உள்பட அனைவருமே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். பதவியில் இருக்கும் அதிபர் உயிரிழந்தால் அந்நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

** ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பு 131ஆவது பிரிவின்படி, அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது இறந்தால் அந்த பதவிக்கு முதல் துணை அதிபர் (ஈரானில் மொத்தம் 12 துணை அதிபர்கள் உள்ளனர்) தேர்ந்தெடுக்கப்படுவார். இருப்பினும், ஈரானின் supreme leader எனப்படும் உட்சபட்ச தலைவரிட இருந்து அதற்கான ஒப்புதலை பெற வேண்டும்.

Latest Videos

undefined

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை: பிரதமர் மோடி!

** புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை முதல் துணை அதிபர் (irst vice president) இடைக்கால அதிபராக இருப்பார்.

** முதல் துணை அதிபர், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோர் அடங்கிய கவுன்சில் அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபருக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

** தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு பதிலாக தற்காலிகமாக அந்த பதவியை ஏற்க தகுதியானவர் அந்நாட்டின் முதல் துணை அதிபர் முகமது முக்பர். ஈரானின் இடைக்கால அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

முன்னதாக, ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி கடந்த 2021ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 2017இல் நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், தனது இரண்டாவது தேர்தலில் ஈரான் அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய கால அட்டவணையின்படி, ஈரான் அதிபர் தேர்தல் 2025இல் நடைபெற உள்ளது. ஆனால், இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ளதால், அதற்கு முன்பே அதிபர் தேர்தலை நடத்தியாக வேண்டும். அதாவது, 2024 ஜூலை 10ஆம் தேதிக்குள் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.

click me!