அமெரிக்காவின் ஜோலியை முடிக்கப்போகும் ஈரான்..!! அணு ஆயுத குண்டுகளை பிரயோகிக்க திட்டம்...??

By Ezhilarasan Babu  |  First Published Jan 6, 2020, 12:34 PM IST

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் சதி வேலைகளில் இறங்கினால்,   அமெரிக்கா ஒன்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது . 


அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்துவதாக கடந்த 2009ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது .  அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவதாகவும் அமைதியை நிலைநாட்ட கடந்த 2011ஆம் ஆண்டு சீனா ,  அமெரிக்கா ,  பிரான்ஸ் ,  ரஷ்யா ,  இங்கிலாந்து  ஆகிய ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளும், பின்னர்  ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

Latest Videos

அது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில்,   அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாப கடந்த 2018 ஆம் ஆண்டே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  அறிவித்தார் .  இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடை நடவடிக்கைகளை  அமெரிக்கா எடுத்து வருகிறது.   இந்நிலையில் ஈரான்  புரட்சிப்படைதளபதி அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந் நிலையம் அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி ஆகி விட்டதாகவும் அதை தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும்  ஈரான் அறிவித்துள்ளது . ஆகவே  இனிய எந்தவிதமான நிபர்ந்தனைகளும்  ஈரானை கட்டுப்படுத்தாது எனவும் ஈரான்  அறிவித்துள்ளது. 

 

தங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கடுமையாக வருந்தும்  நிலை ஏற்படும் என்றும்,    அமெரிக்காவுக்கு ஈரான் தகுந்த  பதிலடி கொடுக்கும் என்றும் ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.   அதேநேரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் சதி வேலைகளில் இறங்கினால்,   அமெரிக்கா ஒன்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது .  என  பதிலுக்கு மிரட்டியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.  அமெரிக்கா ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது . 

 

click me!