எங்களை சீண்டுனா ஆள் அட்ரஸ் இல்லாம போயிடுவீங்க... ஈரானுக்கு அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Jan 5, 2020, 11:23 AM IST
Highlights

ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;- பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!