
பணவீக்கம், வேலையின்மையை எதிர்த்து ஈரானில் நடந்து வரும் போராட்டங்கள்நிலைமை மிகவும் மோசமடையச் செய்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை குறைந்தது 217 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், புரட்சிகர காவல்படை அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போராட்டங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும், அவர்கள் சுடப்பட்டால் புகார் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். நிலைமை எவ்வளவு பதட்டமாகிவிட்டது என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
ஆரம்பத்தில், பணவீக்கம், வேலையின்மை, மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆனால் காவல்துறை, பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால், கோபமாக வெடித்தது. சில நாட்களுக்குள், இந்த போராட்டங்கள் இனி அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், மக்கள் அரசாங்கத்தை வெளிப்படையாக எதிர்க்கு நிலைக்கு சென்றுள்ளது.
ஈரானில் போராட்டங்கள் டிசம்பர் 28, 2025 அன்று தொடங்கியது. ஈரான் சர்வதேச போராட்டங்களின் முதல் 10 நாட்களின் தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. அடுத்து 91 நகரங்களில் இருந்து 453 வீடியோக்களை பகுப்பாய்வு செய்யப்பட்டது. மொத்தம் 641 கோஷங்கள் எழுப்பப்பட்டன. மக்கள் விருப்பமின்றி வீதிகளில் இறங்கவில்லை. ஆனால் தெளிவான நோக்கத்துடன் தெருக்களில் இறங்குகிறார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
மிகவும் பொதுவாகக் கேட்கப்பட்ட முழக்கம் "இது கடைசிப் போர், பஹ்லவிகள் திரும்புவார்கள்". அதாவது தற்போதைய இஸ்லாமிய அமைப்புக்கு பதிலாக பழைய ஷாவின் ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை. அடுத்த மிகவும் பொதுவான முழக்கம் "சர்வாதிகாரி ஒழிக". இது உச்ச தலைவர் காமெனியை நேரடியாக நோக்கி கூறப்பட்டடது. மீண்டும் மீண்டும் "காமெனி ஒழிக," "ஜாவித் ஷா வாழ்க," "ரேசா ஷா, சாந்தியடையுங்கள்" என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்றொரு வலுவான முழக்கம், "இந்த ஆண்டு இரத்தக்களரி ஆண்டு. சையத் அலி வீழ்வார்" என்பது தெளிவாக அதிகார மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது.
போராட்டங்கள் இனி தெஹ்ரானில் மட்டும் இல்லை. ஃபர்சன், அசதாபாத் மற்றும் கோ-செனார் போன்ற சிறிய பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கினர். அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய குடியரசுக்கும் எதிரான கோபம் பொதுவானது. இறப்புச் செய்திகள் வந்தவுடன், கோஷங்கள் மேலும் அதிகரித்தன. இறுதிச் சடங்குகளிலும் எதிர்ப்புகள் கேட்டன.
ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரை ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வெளிநாட்டினருக்காக வேலை செய்யும் கூலிப்படையினரை ஈரான் பொறுத்துக்கொள்ளாது என்று காமெனி கூறினார். போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு ஏஜெண்டுகள் இருப்பதாகவும், அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் காமெனி குற்றம்சாட்டியுள்ளார். பொது சொத்துக்களை சேதப்படுத்துவதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மகிழ்விக்க விரும்பும் சில கலவரக்காரர்கள் நாட்டில் இருப்பதாக காமெனி கூறினார்.