ஈரான்-ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்!!  140 பேர் உயிரிழந்த பரிதாபம்!!!

 
Published : Nov 13, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
ஈரான்-ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்!!  140 பேர் உயிரிழந்த பரிதாபம்!!!

சுருக்கம்

iran earthquake ... 140 people killed

ஈரான் – ஈராக் எல்லையையொட்டியுள்ள பகுதியில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கடட்டங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 140 க்கும் மேற்ப்டடோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரான் -ஈராக் எல்லையை ஒட்டியுள்ள பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஈரானில் உள்ள 14 முக்கிய பகுதிகள் குலுங்கின.  வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், 140  பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1000-க்கும்  மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஈரானிய  தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் உள்ள புறநகர் பகுதியான ஹலப்ஜா நகரில் சேதம் அதிகம் இருக்கும்  என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்