
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானை எச்சரித்திருந்தது. அதேபோல் ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதரவு தெரிவித்தனர். இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வந்தது.
வெள்ளை மாளிகை
இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா முதல் முறையாக நேரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதாவது ஃபோர்டோ, நதான்ஸ், எல்பஹான் அணு உலை தளங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக நடத்திவிட்டு அனைத்து போர் விமானங்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும் வேறு எந்த நாட்டு ராணுவமும் செய்யாத ஒன்றை செய்திருப்பதாகவும், இது அமைதிக்கான நேரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பி 2 விமானங்கள் மூலம் தாக்குதல்
மேலும் ராடார் உள்ளிட்ட எந்த கண்காணிப்பிலும் சிக்காமல் குண்டு வீசும் திறன் பெற்ற பி 2 விமானங்களையும், பதுங்கு குழிகளையும் அழிக்கும் 13 ஆயிரம் கிலோ அளவுக்கு வெடிபொருள் கொண்ட குண்டை அமெரிக்கா பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.
பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை
மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று அணுசக்தி மையங்களும் முன்னரே காலி செய்யப்பட்டன. பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது. மூன்று மையங்களிலும் அணுக்கதிர்வீச்சு பொருட்கள் இல்லை என்று ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் போரின் தொடக்கம் ஹவுதி அமைப்பு
ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் போரின் தொடக்கம். அணுசக்தி நிலையத்தை அழிப்பது போரின் முடிவு அல்ல. அது ஆரம்பம் என ஏமனின் ஹவுதி அமைப்பு விமர்சனம் செய்துள்ளார்.