முதலீட்டாளர்களைக் கவர பாகிஸ்தான் செய்த கேவலமான வேலை !! அழகிகளை பெல்லி டான்ஸ் ஆட வைத்து குஷிப்படுத்திய அதிகாரிகள் !!

By Selvanayagam P  |  First Published Sep 9, 2019, 10:25 AM IST

பாகிஸ்தானில் தொழில் தொடங்க வரும்படி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அந்நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர்களை குஷிப்படுத்த அழகிகளின் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது, இந்தியாவுக்கு எதிரான நடவடிகைகைகள் என தொடர்ந்து பாகிஸ்தானின் முறையற்ற நடவடிக்கைளால் கடந்த 30 ஆண்டுகளல் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானின் நிதி பற்றாக்குறையானது 2018-19 ம் நிதியாண்டில் உச்சத்திற்கு சென்றுள்ளது. 

பாகிஸ்தானின்  பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அந்நாட்டிற்கு  நிதியுதவி அளித்து வருகின்றன. தற்போது பாகிஸ்தானில் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Latest Videos

இதனால் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக செப்டம்பர் 4 முதல் 8 ம் தேதி வரை பாகிஸ்தானின் அஜர்பய்ஜனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் நடன அழகிகளின் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்கு வந்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்த டான்ஸ் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகள் குஷிப்படுத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் ஆபாச நடனம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிற்து.

இதையடுத்து பாகிஸ்தானிலேயே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஒருவர் நடன அழகிகளின் கவர்ச்சி நடனம் நடத்தி தான் முதலீடுகளை ஈர்க்க வேண்டி நிலையில் பாகிஸ்தான் உள்ளது என கிண்டல் செய்துள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க அந்நாடு கண்டுபிடித்திருக்கும் புதிய வழிதான் பெல்லி டான்ஸ்  என குறிப்பிட்டுள்ள பாகிஸ்தானியர் ஒருவர்,  இதே போன்று ஆபாச நடனங்கள் நடத்தி எருமைகள், கழுதைகள், நாய்கள், பன்றிகளை விற்பதற்கும் மாநாடு நடத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

click me!