நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசியா விமானம் !! 188 பயணிகள் உயிரிழப்பு?

Published : Oct 29, 2018, 09:38 AM IST
நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசியா விமானம் !! 188  பயணிகள் உயிரிழப்பு?

சுருக்கம்

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இருந்து பினாங்கு தீவுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது. அந்த 188 பேரின் கதி என்ன என தெரியவில்லை.அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம்,  புறப்பட்ட 13-வது நிமிடத்தில்  விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

இதையடுத்து மாயமான ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது.  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை அதிகாரிகள் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் மிதப்பதாகவும், ஒரு சில பயணிகளின் உடல்களும் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!