அமெரிக்காவில் தன்னை விட இரண்டு மடங்கு வயதில் மூத்த, தோழியின் தந்தையைத் இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அவர் எல்லா விஷயத்திலும் சூப்பர் என அந்த இளம்பெண் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா, பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர். அவரின் நெருங்கிய தோழி அமெண்டா. இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். அமெண்டாவின் வீட்டுக்கு டெய்லர் அடிக்கடி வந்து போவார். அப்போது அமெண்டாவின் தந்தை கெர்ன் லேமனைச் சந்தித்தார் டெய்லர். முதலலி நண்பர்களாக பழகிய அவர்கள் இருவரும் பின்னர் நெருக்கமானர்கள்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனாலும் இரண்டு வீட்டிலும் இதற்கு பயங்க எதிர்ப்பு கிளம்பியது.இந்த திருமணத்தில் அமெண்டாவுக்கும் விருப்பமில்லை. ஆனால் இறுதியில் போராடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
'முதன்முதலாக லேமனைச் சந்தித்தபோதே பிடித்தது. இருவருக்கும் இசை, பயணம், திரைப்படத்தில் ஒத்த ரசனை இருந்தது. அது காதலாக மாறியபோது தோழியின் தந்தையைத் திருமணம் செய்ய முயற்சிக்கிறோமே என்று குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டேன் என்றார் டெய்லர். ஆனால் லேமேன் எல்லா விஷயத்திலும் சூப்பராக செயல்பட்டார். அதனால் எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன் என தெரிவித்தார் டெய்லர்.
தோழி அமெண்டா முதலில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் பின்னர் என்னைப் புரிந்துகொண்டார். அதனால் விரைவிலேயே குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இதையடுத்து மெக்சிகோவில் 25 நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றால் டெய்லர்..
என்னை விட வயதில் மிகவும் மூத்தவர் என்பதால் அவரின் வருங்காலம் குறித்து என் நண்பர்கள் அச்சம் தெரிவித்தனர். நாளையே கூட நான் முதலில் விபத்தால் இறந்துவிடலாம். என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இன்றைய நாளை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் டெய்லர்.