
இனி குறுகிய கால கல்வி அல்லது அகாடமிக் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த ‘Gratis Visa’ என்பது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் விசா. இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சில SAARC நாடுகளின் குடிமக்கள், தூதரக பயணிகள் போன்றோருக்கே வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஜெர்மனியில் தற்போது சுமார் 49,500 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பெரும்பாலானோர் எம்.எஸ் படிப்பில் STEM துறைகளை தேர்வு செய்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. TU Munich, Heidelberg போன்ற பல்கலைக்கழகங்களில் குறைந்த செலவில் உலக தர கல்வி கிடைப்பது காரணமாக இந்திய மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். புதிய விதிகளின் படி, 2025 பிப்ரவரி 17 முதல் அனைத்து மாணவர் விண்ணப்பங்களும் டிஜிட்டல் முறையில் (digital-di.de) மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால், 2024 செப்டம்பர் 1 முதல் நிதி ஆதாரச் சான்று €11,904 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகை, இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்வியில் அதிகம் பங்கேற்க உதவுகிறது. விசா கட்டணச் சுமை குறைவதால், கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற வாய்ப்புகள் இரு நாடுகளுக்கும் வலுப்பெறும்.