
உலகில் பல்வேறு நாடுகளில் இந்திய மாணவர்கள் தங்களது கல்வியை பயின்று வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள லௌபரோ என்ற பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றார் ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவர். இந்நிலையில் கிழக்கு லண்டனில் இருந்து கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து தெரிவித்து, மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுள்ளார். மஞ்சிந்தர் சிர்சாவின் கூற்றுப்படி, காணாமல் போன மாணவர் ஜிஎஸ் பாட்டியா கடைசியாக டிசம்பர் 15 அன்று கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ப்பில் காணப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா.. வாஷிங்டனில் கார் பேரணி நடத்தி கொண்டாடிய இந்துக்கள்..
அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் லஃபரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்துகொள்ளுமாறு அவர் தனது பதிவில் வலியுறுத்தினார். லண்டன் நகரில் பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
"Loughborough பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜி.எஸ். பாட்டியா, டிசம்பர் 15 முதல் காணவில்லை. கடைசியாக கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ஃபில் காணப்பட்டார். @DrSJaishankar Ji-யின் அன்பான கவனத்திற்கு அவரைக் கண்டுபிடிப்பதில் @lborouniversity & @HCI_London இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் உதவி மிகவும் முக்கியமானது. தயவுசெய்து பகிரவும், பரப்பவும்" என்று மஞ்சிந்தர் சிர்சா X இல் பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட பாஜக தலைவர், இந்திய மாணவர் பற்றிய எந்தத் தகவலையும் வழங்க இரண்டு தொடர்பு எண்களைப் பகிர்ந்துள்ளார். அந்த மாணவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.