#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது..!! சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2020, 3:02 PM IST
Highlights

உண்மையில் பிரதமர் மோடியின் திடீர் லே பயணம் சீனா உட்பட முழு உலகிற்கும் ஒரு செய்தியை பிரகடனப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி லேவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி இந்திய-சீன எல்லைப் பகுதியான லே பகுதியில்  ஆய்வு நடத்தியிருப்பது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்த தரப்பும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில்  சீனா உரிமை கொண்டாடும் இந்திய பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் சீன ராணுவமும் எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்றஅபாயசூழல்ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை திடீரென இந்திய பிரதமர் மோடி லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், தரை மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் இருக்கும் லே பகுதி உள்ள நீமுவுக்கு சென்ற பிரதமர் மோடி, இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்,  பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், தரைப்படை தளபதி எம்.எம் நரவானே  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி உற்சாகமூட்டும் வகையில் உரையாடினார்.  நீமு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி உரையாடி இருப்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  மேலும்  மோடியின் பயணம் சீனாவுக்கு வலுவான எச்சரிக்கை செய்தி எனவும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான்,  இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க ராணுவம் மற்றும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் எந்த ஒரு தரப்பும் எல்லையில் பதற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது இந்திய சீன ராணுவத்தினர் இடையே வன்முறை தாக்குதல் நடைபெற்று 18 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி எல்லைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது சீனாவை பதற்றம் அடைய வைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் நீமு என்ற இடத்தில் ராணுவ தளபதிகளிடம் எல்லை விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையில் பிரதமர் மோடியின் திடீர் லே பயணம் சீனா உட்பட முழு உலகிற்கும் ஒரு செய்தியை பிரகடனப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி லேவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.  மேலும் எல்லையில் இருந்து எந்த விதத்திலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று சீனாவுக்கு  ஒரு செய்தியை இதன்மூலம் மோடி கூறியுள்ளார் என்றார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே சிவாச் பிரதமர் மோடியின் லே வருகை, நாங்கள் எல்லையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சீனாவுக்கு  தெரிவித்துள்ளது. சீன வீரர்கள் எல்லையில் நின்றால் எங்கள் வீரர்களும் எல்லையில் நிற்பார்கள்  என்பதுடன் எந்த ஒரு விஷயத்திலும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்பதை இப்பயணம் தெரிவிக்கிறது.  

மேலும் மோடியின் இப்பயணம் எல்லையில் முன்னணியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் மனவுறுதியை அதிகப்படுத்தியுள்ளது என்று பாதுகாப்பு நிபுணரும் ஓய்வுபெற்ற பிரிகேடியருமான விக்ரம் தத்தா தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி ராணுவத்துடன் இணைந்து நிற்பது மிக ஆரோக்கியமான விஷயம், இது ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முழு பலத்தையும் மன உறுதியையும் கொடுக்கும் இதனால் அவர்கள் சீனாவை துணிவுடன் எதிர்க்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
 

click me!