பசிபிக் பகுதிகளை குறிவைத்து இரண்டு போர் கப்பல்களை பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
உலக பொருளாதாரத்தை மட்டுமின்றி உலக நாடுகளின் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றன. இந்தியாவும் சளைத்தது இல்லை என்ற அடிப்படையில் இந்த இருநாடுகளுடன் பொருளாதாரத்தில் மட்டுமின்றி அந்நிய நாடுகளுடனான உறவுகளையும் மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்று வந்தார். அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பசிபிக் கடல் பகுதியை ஒட்டிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு தடைகல்லாக அமெரிக்க இருந்து வருகிறது. அமெரிக்காவின் சார்பிலும் மோடி தனது பயணத்தின்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருந்தார். தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா முந்திக் கொண்டு பசிபிக் கடல் பகுதியிலும் தனது கவனத்தை திருப்பிக் கொண்டுள்ளது.
undefined
ஐஎன்எஸ் கொல்கத்தா:
இந்த நிலையில்தான் அமெரிக்கா விழித்துக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவும் தனக்கு அருகில் இருக்கும் நாட்டுடன் உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பப்புவா நியூ கினியா நாட்டுக்கு ஏவுகணைகளை அழிக்கும் ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சயாத்ரி கப்பல்களை இந்தியா புதன் கிழமை அனுப்பி இருக்கிறது. பப்புவா கினியா தலைநகரான போர்ட் மோர்ஸ்பை பகுதியில் இந்த கப்பல்கள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
38 விமானங்கள், 300 கார்கள், 52 படகுகள்.. இந்த உலகப் பணக்காரரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
பசிபிக் நாடுகளில் உயர்மட்ட மருத்துவமனை:
இந்த பிராந்தியத்தில் கடல் சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று தூதரகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்று வந்த பின்னர் முதல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது. ஏற்கனவே, பிஜி முதல் 12 தீபகற்ப நாடுகளில் உயர்மட்ட மருத்துவமனைகளை அமைப்பதற்கு பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். பசிபிக் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரதமர் எடுத்துள்ளார். தரமான மருத்துவக் கருவிகள், நர்ஸ்கள், கட்டமைப்புகள் மேம்ப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்து இருந்தார்.
மலபார் கடற்பயிற்சி:
போர்ட் மோர்ஸ்பையில் இரண்டு நாட்களுக்கு முகாமிட்ட பின்னர் இந்த இரண்டு கப்பல்களும் குவாட் ஒப்பந்தத்தின் பேரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மலபார் கடற்படை பயிற்சிக்கு செல்கின்றன. இந்த குவாட் அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. மலபார் கடல்பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
தைவான், சாலமன் மீது சீனாவின் கண்:
பசிபிக் நாடுகளுடன் உறவை சீனா அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த குவாட் அமைப்பு செயல்படுகிறது. பசிபிக் பகுதிகளில் இருக்கும் நாடுகள் சீனாவுடன் நெருங்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்று குவாட் நாடுகள் திட்டமிடுகின்றன. பசிபிக் நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் அந்த நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும், தைவான், சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. தைவானுக்கு அடிக்கடி ஆளில்லா விமானங்களை, போர் கப்பல்களை சீனா அனுப்பி வருகிறது. மேலும் சாலமன் தீபகற்பத்துடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் பப்புவா நியூ கினியாவுடன் அமெரிக்கா கடந்த மே மாதத்தில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
“நீ மட்டும் தூங்குன, செத்துருவ” ஆபத்தான விளையாட்டில் ஒருவர் மரணம்.. மற்றொருவரின் நிலை என்ன?
பருவநிலை மாற்றம்:
பசிபிக் தீபகற்ப நாடுகளின் பரப்பளவு சுமார் 15 மில்லியன் சதுர மைல்களுக்கு பரவிக் கிடக்கிறது. இந்த நாட்டுத் தலைவர்களின் கவலையே தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதுதான்.
பப்புவா கினியா இயற்கை வளங்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே இருக்கும் குட்டி தீபகற்பம்தான் பப்புவா நியூ கினியா. இங்கு ஏராளமான இயற்கை கனிம வளங்கள் இருப்பதும் அமெரிக்கா மற்றும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த பசிபிக் நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு இருந்தார். பிரான்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தன. இந்தக் கூட்டத்தில் இறுதி நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ள முடியவில்லை.
சீனாவுடன் சாலமன் தீபகற்பம் நெருக்கம்:
இதற்கிடையே சாலமன் தீபகற்ப நாடுகளின் பிரதமர் மானசே சொகவரே கடந்த ஜூலை மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது சீன நாட்டின் கடன் உதவியுடன் சாலமன் தீபகற்பத்தில் வசிக்கும் 7 லட்சம் மக்களுக்காக ஹூவாய் தொலைதொடர்பு டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் சீனா:
இப்போது மட்டுமில்லை. முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் கால கட்டங்களிலும் அமெரிக்கா, ஜப்பான், பசிபிக் நாடுகள் என்று ஒரு பதற்றமான சூழல் நிலவி வந்து இருக்கிறது. கடலுக்கு அடியில் கேபிள்கள் அமைப்பதற்கு அப்போது அமெரிக்கா கடுமையான எதிர்ப்பு ஜப்பானுக்கு தெரிவித்து இருந்தது. தற்போதும் அதே பிரச்சனைதான் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சீனா தற்போது பசிபிக் கடல் பகுதியில் கடலுக்குள் அடியில் கேபிள்கள் அமைப்பது மற்றும் விமான தளங்களை அமைப்பது என்று பிசியாகி இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவுக் கரம் நீட்டுவதை பசிபிக் நாடுகள் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், இந்த ஆதரவு நீடித்து, நிலையானதாக இருக்க வேண்டும் என்று பசிபிக் நாடுகள் கருதுகின்றன.