அபுதாபி லாட்டரி ஜாக்பாட்டில் ரூ.33 கோடியை அள்ளிய இந்தியர்! அதிர்ஷ்ட டிக்கெட் வாங்க இதுதான் ட்ரிக்!

By SG Balan  |  First Published Feb 11, 2024, 11:33 AM IST

கேரளாவைச் சேர்ந்த 40 வயதான ராஜீவ் என்றாவது ஒருமுறை வெற்றி பெறுவோம் என அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மொத்தம் ஆறு டிக்கெட்டுகளை வைத்திருந்தார். அவற்றில் ஒரு சீட்டுதான் அவரது வெற்றியை உறுதி செய்தது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியரான ராஜீவ் அரிக்காடு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம்களை (சுமார் ₹ 33 கோடி) வென்றுள்ளார். ராஜீவ் 037130 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதுதான் அவரது வாழ்க்கையை மாற்றியமைக்கும் தருணமாக மாறியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக பிக் டிக்கெட் குலுக்கலில் பங்கேற்று வரும் ராஜீவ், தற்போது அல் ஐனில் உள்ள கட்டிடக்கலை நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 33 கோடி பரிசைப் பெற்றுத் தந்திருக்கும் லாட்டரி டிக்கெட்டை தனது அன்புக்குரிய குழந்தைகளின் பிறந்தநாளை வைத்துத் தேர்வு செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அதிர்ஷ்டம் வாய்த்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கும் ராஜீவ், தனக்குக்க கிடைக்கும் பரிசுத் தொகையை 19 பேருக்கு சமமாகப் பிரித்துப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். இந்த தாராளமான மனசு அவரது வெற்றியின் மகிழ்ச்சியை பல மடங்கு பெரிதாக்கி இருக்கிறது.

'பயமா இருக்கு... ப்ளீஸ் இங்க வாங்க...' இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி பலியான பாலஸ்தீன குழந்தை

"நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல் ஐனில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இந்த முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 என்ற எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த தேதிகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இதே போல வாங்கிய டிக்கெட்டில் நூலிழையில் 1 மில்லியன் திர்ஹாம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டேன்" என்று ராஜீவ் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த 40 வயதான ராஜீவ் என்றாவது ஒருமுறை வெற்றி பெறுவோம் என அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மொத்தம் ஆறு டிக்கெட்டுகளை வைத்திருந்தார். அவற்றில் ஒரு சீட்டுதான் அவரது வெற்றியை உறுதி செய்தது.

"பிக் டிக்கெட்டிலிருந்து எனக்கு ஒரு சிறப்புச் சலுகை கிடைத்தது. நான் இரண்டு டிக்கெட் வாங்கும்போது நான்கு டிக்கெட்டுகள் இலவசமாகக் கிடைத்தன. நான் எப்போதுமே வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த முறை ஆறு டிக்கெட்டுகள் கிடைத்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது" என்று ராஜீவ் கூறியுள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா இருவரும் அவரை அழைத்த தருணங்களை நினைவுகூர்ந்த அவர், "நான் பேசாமல் இருந்தேன். என்னால் அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பல வருடங்களாக ரிச்சர்டின் குரலை நான் கேட்டுக்கொண்டிருந்ததால், ரிச்சர்டின் குரலை அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் இது என் முதல் பரிசு என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது ஒரு ஆச்சரியம். எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில உள்ள மற்றவர்களுக்கும் வாழ்க்கையை மாற்றும் தருணம்" எனத் தெரிவித்துள்ளார்.

ரீலீசுக்கு ரெடியான ரெட்மீ இயர்பட்ஸ் 5! AI வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் பக்காவான ஆடியோவுக்கு கேரண்டி!

click me!