பஞ்சாபில் உள்ள QP Pharmachem நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதாகவும், மேலும் அவர்களுடைய ஏற்றுமதி நிறுத்தப்படுவதாவும் இந்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் பயன்படுத்தப்பட்ட QP Pharmachem நிறுவன இருமல் சிரப்களில் உலக சுகாதார அமைப்பு (WHO) சில மாசுபாட்டை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் அந்த மருந்து தயாரிப்பாளரின் உற்பத்தி உரிமத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பல குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்பட்ட இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அப்பொழுது உலக சுகாதார மையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செயல்பட்டு வந்த மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த சில இருமல் மருந்துகளை உட்கொண்ட பல குழந்தைகள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட Oppenheimer.. இந்தியாவில் நேரு செய்த செயல்.. என்ன நடந்தது?
தற்போது சிக்கலில் சிக்கியுள்ள QP நிறுவன உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து மாதிரிகள் தரமானதாக இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் பாரதி பிரவின் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். QP Pharmachem நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதிர் பதக், ஊடகங்களிடம் பேசுகையில், இடைநீக்க உத்தரவுக்கு எதிராக அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
குயீபெனெசின் டிஜி என்று பெயரிடப்பட்ட இருமல் மருந்தில் பயன்படுத்தப்படும் பொருட்களை அதன் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை செய்ததாகவும் பதக் கூறினார். அவர் கம்போடியாவிற்கு மட்டுமே தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததாகவும், அது மஷால் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியா நாட்டிற்கு எவ்வாறு சென்றடைந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
ஏற்கனவே சுமார் 89 குழந்தைகளின் மரணத்தில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் உற்பத்தி உரிமங்கள் (Maiden Pharmaceuticals மற்றும் Marion Biotech) இடைநிறுத்தப்பட்டு, அவற்றின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5வது கட்டத்தைக் கடந்த சந்திரயான்-3! ஆகஸ்ட் 1 முதல் நிலவை நோக்கிப் பயணம்! இஸ்ரோ அறிவிப்பு