இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து... 2 விமானிகள் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Sep 27, 2019, 5:01 PM IST

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் விபத்தில் உயிரிழந்தனர்.

Latest Videos

இந்திய ராணுவத்தை சேர்ந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் பூட்டான் நாட்டு எல்லைக்குள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், பயிற்சி முடிந்து தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலைகள் சூழ்ந்த கென்ட்டோங்மானி பகுதியில் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் இந்திய ராணுவ விமானி மற்றும் பூடான் ராணுவ விமானி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ விமானி சிறப்பு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

click me!