இந்தியாவுக்கு அடுத்து அதிகமா ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடு எது தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
இந்தியாவுக்கு அடுத்து அதிகமா ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடு எது தெரியுமா?

சுருக்கம்

இந்தியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது.

பனிப்போர் முடிவுற்ற பின்னர் நடைப்பெற்று இருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதி, இதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளன.

இந்தியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது.

ஆயுத விற்பனையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் 75 சதவீத ஆயுத ஏற்றுமதியை வழங்கியிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!