இலங்கை அகதிகள் நாடு திரும்புங்கள் - பிரதமர் சொல்லிட்டாரு, ஆனால் சாத்தியமா?

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
இலங்கை அகதிகள் நாடு திரும்புங்கள் - பிரதமர் சொல்லிட்டாரு, ஆனால் சாத்தியமா?

சுருக்கம்

தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு திரும்புங்கள் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அந்நாட்டின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான மனுஸ் மற்றும் நவுரு தீவில் சுமார் இரண்டாயிரம் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் முதன்மையாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் உள்ளனர்.

2013 முதல் கடுமையான அகதிகள் கொள்கையை கையாண்டு வரும் ஆஸ்திரேலியா படகு வழியாக தஞ்சமடைய முயற்சிக்கும் எந்தவொரு அகதியையும் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை. அத்துடன் அப்படி வர முயற்சிப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கு வாழ்நாள் தடையையும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆஸ்திரேலியாவில் வைத்து இப்படியொரு அறிவிப்பை இலங்கை அகதிகளுக்கு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் இலங்கைக்கு செல்லத் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும் இலங்கையில் தமிழர்கள் பெரும்பானமையாக வாழும் வடகிழக்கில் இராணுவமயமாக்கல் சூழல் கடுமையாகவே உள்ளது.

பெருமளவிலான தமிழர்களின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இள்ளது. அத்துடன் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைப் பிரிவின் அச்சுறுத்தல்கள் நீடித்து வருகிறது.

இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் அகதிகள் நாடு திரும்புவது எந்தளவிற்கு சாத்தியம் என்பதை பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!