இந்திய சிங்கப்பூர் இடையேயான உறவு போற்றத்தக்கது! - அரிசி ஏற்றுமதிக்கு சிறப்பு அனுமதி அளித்த இந்தியா!

By Dinesh TG  |  First Published Aug 30, 2023, 8:21 AM IST

சிங்கப்பூர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
 


இந்தியா - சிங்கப்பூர் இடையேயான பொருளாதார், மக்கள் தொடர்பு, சூழ்நிலை என பலவற்றில் மிகநெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அந்த புரிதலின் காரணமாக சிங்கப்பூர் நாட்டின் உணவுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அரசி வகைகள் அல்லாத இதர வெள்ளை அரசி வகைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா உடனடியாக தடைவிதித்தது. இதனால், சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளட்ட அண்டைநாடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

உள்ளூர் சந்தையில் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், போதிய அளவு அரிசி இருப்பதை உறுதி செய்யவும் மற்றும் ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதாக இந்திய உணவு அமைச்சகம் தெரிவித்தித்தது.

நான் முழுசா திருப்தி அடையவில்லை.. காசை திருப்பிக்கொடு.. 2 முறை உறவில் இருந்துவிட்டு பெண்ணை தாக்கிய கொடூரன்!

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25ம் தேதி) புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் அரிசியின் விலை உயரலாம் என வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து அரசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், முறையான உத்தரவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சக வட்டராங்கள் தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

சிங்கப்பூர் கொண்டாடும் தமிழின் பெருமை! ''தமிழ் இளைஞர் திருவிழா''!

click me!