இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை...!! வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2020, 6:20 PM IST
Highlights

இந்தியாவின் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனாவில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர் என கூறப்படுகிறது, ஆனாலும் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தரவை வெளியிடவில்லை என்றார். 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என்றும், ஒவ்வொரு வீரரும் ஆயுதம் தாங்கியே எல்லையில் நிற்கின்றனர் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் பல ராணுவ வீரர்கள்  காணாமல் போனதாகவும், பலர் சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் அப்போது முன்கூட்டியே தாக்க தயாரிப்புடன்  இருந்த சீனர்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடந்தி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்.  அதில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நிராயுதபாணிகளாக சென்ற இந்திய ராணுவ வீரர்களை கொன்று சீனா ஒரு பெரும் குற்றத்தை செய்துள்ளது. நான் ஒன்று கேட்கிறேன், நம் வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்.? அது ஏன்.? அந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பி உள்ளார். அதே போல் இந்திய ராணுவ வீரர்கள் பலர் மோதல் நிகழ்ந்த அன்று காணாமல் போனதாகவும், அவர்கள் சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது, இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வான் பள்ளத்தாக்கில் திங்கட்கிழமை இரவு  ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பின்னர், இந்திய வீரர்கள் காணாமல் போனதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என்றார், மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது அதில் இந்தியாவின் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனாவில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர் என கூறப்படுகிறது, ஆனாலும் சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தரவை வெளியிடவில்லை என்றார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுவதுபோல நம் வீரர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லாமல் இல்லை.  அனைத்து இந்திய வீரர்களும் எப்போதும் ஆயுதம் ஏந்தியே உள்ளனர். அவர்கள் ஓய்வுபெறும் வரை அவர்கள் ஆயுதங்களுடன் உள்ளனர். எந்த ஒரு வீரரும் நிராயுதபாணிகளாக இல்லை, ஆனால் இரு நாட்டு ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஏற்படும் மோதலில் ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது  என்பதை நம் வீரர்கள் அறிந்துள்ளனர், இந்திய வீரர்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றினர் என அவர் விளக்கமளித்துள்ளார்.
 

click me!