இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளது.
செங்கடலில், கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கப்பல் மீது மோதிய ட்ரோன்கள் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட M/V சாய்பாபா என்ற சரக்குக் கப்பலில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கப்பல் ஒன்றுக்கு உதவி கோரி அழைப்பு அனுப்பப்பட்டது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்கா ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளது.
பெண்களை மிரட்டி பாலியல் செயலில் ஈடுபடுத்தினோம்... ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆபாசப்பட நிறுவனம்!
இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெற்கு செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பலுக்குத் தகவல் தெரிவித்துள்ளன. அவற்றில் ஒன்றான M/V Blamanen என்ற நார்வே நாட்டு சரக்குக் கப்பல், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ட்ரோன் மீது மோதுவதில் இருந்து நூலிழையில் தப்பியதாகக் கூறியிருக்கிறது.
M/V சாய்பாபா கப்பல், ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதாகவும் ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அமெரிக்கக் கப்பலுக்குத் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் USS Laboon கப்பலில் இருந்து இந்தச் செய்திகளுக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
அண்மையில், ஏமனின் ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் நான்கு ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு