என் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு.. மக்களே ஜாக்கிரதை - சிங்கப்பூர் சட்ட அமைச்சர் சண்முகம் விடுத்த எச்சரிக்கை!

By Ansgar R  |  First Published Dec 24, 2023, 1:46 PM IST

Singapore Law Minister Shanmugam : சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக அரசு துறை அதிகாரிகள் என்ற பெயரில் பெரிய அளவில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை பதிவில் இன்ஸ்டாகிராமில் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து வரும் மோசடி கணக்கை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள் அனைவரையும் அவர் எச்சரித்துள்ளார். 

அமைச்சர் திரு. சண்முகம் கடந்த டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியிட்ட தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்த தெரிவித்துள்ளார். kshanmugam__private_page என்ற பெயரில் தனது பெயரில் போலி கணக்கு வளம் வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இன்று டிசம்பர் 24 முதல், அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

undefined

நீ இந்தியன், அங்கேயே போ.. சிங்கப்பூரில் நடந்த இனவெறி சம்பவம் - என்ன நடந்தது?
 
தன்னை பின்தொடர்பவர்களுடன் இணைவதற்காக இந்த மோசடி கணக்கு தன்னை போல ஆள்மாறாட்டம் செய்வதாக சண்முகம் தனது பதிவில் கூறியிருந்தார். மேலும் ஒருவர் அதைப் பற்றி அவருக்குத் தெரிவித் பிறகு தான் இந்த போலி கணக்கு பற்றி தனக்கு தெரியவந்தாகவும் அமைச்சர் திரு. சண்முகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி கணக்கிலிருந்து ஏதேனும் அறிவிப்புகளைப் பெற்றவர்கள் அவற்றைப் புறக்கணித்து, கூடுதலாக அந்த கணக்கையும் புகாரளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். "பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் ஆன்லைனில் படிக்கும் விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும்" என்று அவர் தனது பதிவில் கூறினார். 

 

பெண்களை மிரட்டி பாலியல் செயலில் ஈடுபடுத்தினோம்... ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆபாசப்பட நிறுவனம்!

மேலும் அமைச்சர் திரு. சண்முகத்தின் பெயரில் போலியாக கணக்கு உருவாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2019ம் ஆண்டும் இதே போல ஒரு பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Verify செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து வரும் கருத்துக்களை மட்டுமே நம்புமாறு முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் டான் கின் லியானும் இந்த விவகாரத்தை ஒப்பிட்டு கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!