"இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் ஊடுருவி அங்கு சில பாதுகாப்பு வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ( குடில்களை) சட்டவிரோதமாக நிர்மாணித்ததாகவும்,
சீன- இந்திய எல்லையில் அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த மே மாதம் முதல் இந்தியா , எல்லைக்கோட்டை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தன் படைகள் மூலம் எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா-சீனா இடையே அமைந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது . இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ என்ற ஏரி சமீபத்தில் சர்ச்சைக்குரிய பகுதியாக மாறியுள்ளது . சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள இதன் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது . இதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன .
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ( மே- 5 ஆம் தேதி ) அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களிடம் , ரோந்து பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினர் தாகராறில் ஈடுபட்டு அது மோதலாக மாறியது , தங்கள் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என சீன ராணுவத்தினர் கூச்சலிட்டனர் . தங்கள் எல்லைப் பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக இந்திய ராணுவத்தினர் பதில் தெரிவித்தனர் . இதனையடுத்து ஏராளமான இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு மோதிக்கொண்டனர் . ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கவும் முயன்றனர் , கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் வரை காயமடைந்தனர் . இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது , இதில் பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு நடத்திய பேச்சு வார்த்தையில் , இருதரப்புக்கும் இடையே பதற்றம் தணிந்தது.
இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சீனா மௌனம் காத்து வந்த நிலையில் , அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் , பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதல் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இந்தியா இறங்க வேண்டாம் எனவும், சீன தரப்பில் நடத்தப்பட்டது ஒரு சாதாரண ரோந்து எனவும் , சீனா இந்தியாவுடன் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என கூறினார். மேலும் தெரிவித்த அவர் , எல்லை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது , தெளிவானது சீன எல்லை படையினர் எல்லைப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டி வருகின்றனர் , ஆகவே சீனாவுடன் இணைந்து பணியாற்றவும் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு உதவும் நிலைமைகளை உருவாக்கவும் இந்தியா முன்வர வேண்டும் என அவர் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் , இது அனைத்தையுமே பொய்யாக்கும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .
"இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் ஊடுருவி அங்கு சில பாதுகாப்பு வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ( குடில்களை) சட்டவிரோதமாக நிர்மாணித்ததாகவும், ராணுவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது . அத்துடன், கடந்த மே மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவம் கால்வான் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் எல்லைக்கோட்டை மீறி வருகிறது எனவும் , சீன எல்லை பாதுகாப்பு ராணுவத் துருப்புகளின் சாதாரண ரோந்து நடவடிக்கைகளுக்கு கூட இந்திய ராணுவம் இடையூறு விளைவிக்கும் வகையில் தடைகளை அமைத்துள்ளதாகவும் “தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்ற இந்தியா முயற்சித்ததாகவும் இந்தியா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது . ஆகவே இதில் உடனே தலையிட்ட சீன ராணுவம் தங்கள் படைகள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், சீனா தனது படைகளையும் ராணுவதளவாடங்களையும் இந்திய எல்லையில் குவித்து வருவதையடுத்து , இந்தியாவும் கூடுதல் ராணுவ துருப்புகளை எல்லையில் குவித்து சீன நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன .