இந்தியாவுக்கு எதிராக அணுஆயுதமா..? பதுங்கி இருந்து பாயும் இம்ரான்கான்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2019, 3:49 PM IST
Highlights

இந்தியாவுடன் வழக்கமான போர் வந்தால், பாகிஸ்தான் தோல்வி அடையும் என பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அதேவேளையில் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் போரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியாவுடன் வழக்கமான போர் வந்தால், பாகிஸ்தான் தோல்வி அடையும் என பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அதேவேளையில் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் போரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

இது தொடர்பாக இம்ரான் கான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கிய பின்னர் இனிமேல் டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இல்லை என்று கூறினார். 

மேலும் பேசுகையில், நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக உள்ளேன். இரண்டு அணுஆயுத நாடுகள் வழக்கமான போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணுஆயுத போரில் தான் முடியும். வழக்கமான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் நிச்சயமாக தோல்வி அடையும் என்றார்.

போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, உங்களின் சுதந்திரத்திற்காக சாகும் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தேர்வு செய்யும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாடு, சாகும் வரை போரிட நேர்ந்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் தாம் போருக்கு எதிரானவன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதனால் தான், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளையும் நாடுகிறோம் என்றார். 

click me!