நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி மாறியது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி ஆவேசமுடன் பேசினார்.
இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ
‘அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐ.ஜி துணை ஐ.ஜி. மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன்’ என்றும் எச்சரிக்கை விடும் வகையில் பேசினார். இதன் பின்னர் பொது பேரணியில் பேசும்போது, வரம்பு மீறி பேசி விட்டேன்.
அதனை உணர்ந்து விட்டேன் என்று கூறி இம்ரான் கான் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வருங்காலத்தில் எந்தவொரு கோர்ட்டு மற்றும் நீதிநெறிமுறைகளின் கண்ணியம் புண்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்றும் கான் உறுதி கூறினார். எனினும், பெண் நீதிபதி ஒருவருக்கு எதிராக சர்ச்சையாக பேசியதற்காக இம்ரான் கானுக்கு எதிராக இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க..கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது இல்லத்துக்கு 300 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர் என்று தகவல் வெளியானது. ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த கோர்ட்டு விசாரணையில் இம்ரான்கான் ஆஜராக தவறினார். இதையடுத்து அவர் ஆஜராவதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!