பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பிடிஐ தலைவர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ராவல்பிண்டியில் உள்ள தேசிய பொறுப்புடைமை பணியகம் (என்ஏபி) மே 1 ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதையும் படிங்க: உலகின் மிகவும் பழமையான 7 மரங்கள் இவைதான்.. பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்
undefined
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் பல நகரங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, இம்ரான் கான் கைதுக்கு ஆதரவான இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: உலகின் பணக்கார அரச குடும்பம் எது தெரியுமா? கண்டிப்பா இங்கிலாந்து அரச குடும்பம் இல்லை..
இந்த வழக்கு இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து யாரையும் கைது செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.