ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டால் அமெரிக்காவில் இது நடந்தே தீரும்..!! கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஜோ பிடன்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2020, 1:12 PM IST
Highlights

ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுவார் என்ற அக்கட்சியின் பரிந்துரையை பிடன் நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். 

ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுவார் என்ற அக்கட்சியின் பரிந்துரையை பிடன் நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், தான் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெறும் நிலையில், அமெரிக்காவை சூழ்ந்துள்ள இருள் நீங்கும் என கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தப் பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா  ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக ட்ரம்ப்  மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். 

கொரோனா வைரஸ் ஒருபுறமிருந்தாலும் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஜோ பிடனை ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி அறிவிக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜோ பிடனுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பேசியுள்ளனர்.  இந்நிலையில், குடியரசு கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் முன்மொழியப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அவர் ஏற்றுக்கொண்டார். 

அதேபோல் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் முன்மொழியப்பட்டு, அவரும் அதை ஒப்புக் கொண்டார். அப்போது பேசிய ஜோ பிடன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தோற்கடிக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு நல்லவைகள் நடக்கும். நாட்டில் பரவியிருக்கும் இந்த இருள் அகலும், ஜனநாயகக்கட்சி என்னை  ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை நான் மிகுந்த மரியாதையுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான இந்த பரிந்துரையை நான் மனமார ஒப்புக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஆட்சியில் எந்த தவறும் செய்ய மாட்டோம், அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இருளை நாம் ஒன்றாக இணைந்து முறியடிப்போம் என அவர் அழைப்பு விடுத்தார். 

 

click me!