தடுப்பூசியை பொருத்தவரை 6 கட்ட பணிகள் நடந்து வருகின்றன, 75 முதல் 90 ஆயிரம் கோடி வரை செலவிடப்படலாம், கொரோனாவால் மில்லியன் கணக்கான கோடி ரூபாய் வீணாவதைத் தடுக்க இந்த செலவு அவசியமாகிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் கொரோனா வைரஸின் ஆபத்தில் இருந்தாலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் அந்நாடுகள் விரைவில் அதிலிருந்து மீளும் என உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் 80 முதல் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த தேவையில்லை, 30 முதல் 60 சதவீதம் தடுப்பூசியே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போதுமானது என அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன, உலக அளவில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை. 2.26 கோடியாக உயர்ந்துள்ளது. 7.91 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1.53 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உள்ள நாடுகள் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சிகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும், தனது அறக்கட்டளை மூலம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் அவர் பங்காளித்து வருகிறார். இந்நிலையில் தடுப்பூசி குறித்து தெரிவித்துள்ள அவர், உலகில் covid-19 நோய் தாக்கத்திற்கு முன்னரே பல்வேறு விஷயங்களில் நாம் தோல்வி அடைந்து உள்ளோம், நோய்தொற்றுக்கு முன்னர், இந்த நோய் குறித்து முறையாக கணிக்கப்படவில்லை என்றார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று தி எக்கனாமிஸ்டி வார இதழின் தலைமை செய்தி ஆசிரியருடன் வெபினாரில் பில்கேட்ஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்னும் கூட கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தன்மையை எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. கொரோனா ஆரம்ப போரில் வியட்னாம், தென்கொரியா, உள்ளிட்ட நாடுகள் அதை சிறப்பாக எதிர்கொண்டன. ஆரம்பத்திலேயே சீனா இந்த வைரஸ் தொடர்பாக சில தவறுகளை செய்தது. அதே நேரத்தில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கொரோனா ஆபத்தில் இருந்தாலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைவிட அந்நாடுகள் விரைவில் அதிலிருந்து மீளும்.
தடுப்பூசியை பொருத்தவரை 6 கட்ட பணிகள் நடந்து வருகின்றன, 75 முதல் 90 ஆயிரம் கோடி வரை செலவிடப்படலாம், கொரோனாவால் மில்லியன் கணக்கான கோடி ரூபாய் வீணாவதைத் தடுக்க இந்த செலவு அவசியமாகிறது. 2021 ஆம் ஆண்டு முதற் காலாண்டில் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சோதனைகளை மேற்கொள்வதற்கு சிறிது காலம் ஆகலாம், மொத்தத்தில் பணக்கார நாடுகள் 2021 நடுப்பகுதியில் தடுப்பூசிகளை பெறக்கூடும், அதே 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு அது கிடைக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசியை போலவே ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் சனோஃபி போன்ற நிறுவனங்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் பணியாற்றி வருகின்றன. இதில் தகவல் என்னவென்றால் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, தடுப்பூசிகளை பெற குறைந்தபட்சம் 250 ரூபாயாவது செலவாகும். மொத்தத்தில் அம்மை போன்ற வைரஸ்களுக்கு 80 முதல் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை, ஆனால் 30 முதல் 60 சதவிதம் மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் வளரும் நாடுகளின் நிலை மோசமான நிலையிலிருந்து அதி மோசமான நிலைக்குச் செல்லக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.