பெய்ஜிங்கிற்குச் சென்ற மலேசிய விமானம் மார்ச் 8, 2014 அன்று மாயமானது. சுமார் ஆறு மணி நேரம் தெற்கு நோக்கி பயணித்து, எரிபொருள் தீர்ந்ததால் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
239 பேருடன் பயணித்த மலேசிய விமானம் MH-370 மர்மமான முறையில் காணாமல் போய் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில, உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் தொடங்குவோம் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ளார் மலேசிய அன்வர் பிரதமர் இப்ராஹிம் மெல்போர்ன் நகரில் இதைக் கூறியுள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "மீண்டும் ஆதாரங்கள் கிடைத்தால், நாங்கள் நிச்சயமாக மீண்டும் தேடும் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்குவோம்" என்று கூறினார்.
"இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை. இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துதான் ஆக வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் நடுகடலில் கருப்பு கொடி போராட்டம்!
பெய்ஜிங்கிற்குச் சென்ற மலேசிய விமானம் மார்ச் 8, 2014 அன்று மாயமானது. விமானம் திட்டமிட்ட விமானப் பாதையை விட்டுவிட்டு, மீண்டும் மலேசியாவை நோக்கிச் சென்று கடலை நோக்கிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. விமானம் சுமார் ஆறு மணி நேரம் தெற்கு நோக்கி பயணித்து, எரிபொருள் தீர்ந்ததால் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
விமானத்தைக் கண்டுபிடிக்க மிகப்பெரிய அளவில் தேடல் பணிகள் மேற்கொண்டபோதும், விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜனவரி 2017இல் தேடல் பணிகள் கைவிடப்பட்டன.
ஆஸ்திரேலியா தலைமையில் இந்தியப் பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் நடைபெற்ற தேடுதல் பணியில் விமானத்தின் சில பாகங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.
அம்பானி மகன் வெயிட் போட்டது ஏன்? 108 கிலோ உடம்புடன் போராடும் ஆனந்த் அம்பானியின் கதை!