தைவானிய மக்கள் பெருமளவில் இந்திய உணவுகளை விரும்புகின்றனர். எப்போதும் இந்தியாவின் சன்னா மசாலாவுக்கு நான் அடிமை, இந்தியாவில் தேநீர் பருகுவது அலாதி பிரியம் என இந்தியாவில் தான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
நல்ல மனம் படைத்த இந்தியர்களையும், சுவையான இந்திய உணவுகளையும் தன்னால் ஒரு போதும் மறக்க முடியாது என தைவான் நாட்டு அதிபர் சாய்-இங்-வென் கூறியுள்ளார். தைவானுக்கு ஆதரவாகவும் சீனாவுக்கு எதிராகவும் இந்தியா செயல்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த கிழக்காசியாவின் தீவு நாடாக உள்ளது தைவான். ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் இது இருந்தது. கடந்த 1949ஆம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரை அடுத்து சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது. ஆனாலும் தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே என சீன ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். உலகில் ஒரே ஒரு சீனாதான் உள்ளது, அதில் தைவான் ஒரு அங்கம் என சீன அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சாய்-இங்-வென்(63) மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தைவானின் அதிபராகி உள்ளார். சீனாவுக்கு எதிரான கொள்கை உடைய இவர், தைவான் என்பது தனி நாடு என கூறி வருகிறார். இந்நிலையில் சாய்-இங்-வென்னை இந்தியா வெளிப்படையாக ஆதரித்து வருகிறது.
அவர் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றபோது பாஜக எம்பிக்கள் அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அது சீனாவுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சாய்-இங்-வென்னுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு சுமுகமாக உள்ள நிலையில், சாய் இந்தியாவை புகழ்ந்து ட்விட் செய்துள்ளார். இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுள்ள அவர், சில தினங்களுக்கு முன்பு, இந்தியா குறித்து டுவிட் செய்துள்ளார். அதில், நல்ல மனம் படைத்த இந்திய மக்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றும்,சுவை மிகுந்த இந்திய உணவுகளை மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய உணவு சாப்பிடுவதை நான் எப்போதும் விரும்புகிறேன் என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், தைவானின் பல இந்திய உணவகங்கள் செயல்படுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.
தைவானிய மக்கள் பெருமளவில் இந்திய உணவுகளை விரும்புகின்றனர். எப்போதும் இந்தியாவின் சன்னா மசாலாவுக்கு நான் அடிமை, இந்தியாவில் தேநீர் பருகுவது அலாதி பிரியம் என இந்தியாவில் தான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியா ஒரு துடிப்பான மற்றும் வண்ணமயமான நாடு என பாராட்டியுள்ள அவர், தனது ட்விட்டதை பின் தொடரும் இந்தியர்களையும், இந்திய உணவுகளையும் அவர் புகழ்ந்துள்ளார். இந்தியாவின் அரிசி சாதம் மற்றும் நான், சாலட் மற்றும் வேறு சில இந்திய உணவுகளில் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் கூறியுள்ள அவர், எனது அனைத்து இந்திய நண்பர்களுக்கும் வணக்கம்... டுவிட்டரில் என்னை பின்தொடர்ந்த அனைவருக்கும் நன்றி, இந்தியாவின் நான் கழித்த நேரத்தை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது. உங்கள் வரலாற்று கட்டிடங்கள், உங்கள் கலாச்சாரம், நல்ல மனிதர்களை ஒருபோதும் மறக்க முடியாது. இந்தியாவை நான் நேசிக்கிறேன், அதிகம் தவற விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.