இரண்டாவது முறையாக தாக்குவது கொடூரமாக இருக்கும்..!! கொரோனாவில் இது புது கொடுமை. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2020, 4:57 PM IST
Highlights

அமெரிக்காவின்  நெவாடா மாநில பொதுச் சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிந்து வருபவரும், ஆராய்ச்சிக்கு தலைமைதாங்கும் ஆராய்ச்சியாளருமான மார்க் பண்டோரி கூறுகையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்பவருக்கு மீண்டும் நோய் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, 

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும் நோயாளிகளை மீண்டும் வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாகவும், அதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறையாக  பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாகவும் அதன் அறிகுறிகள் தீவிரமானதாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. சுமார் 180க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் உலக அளவில் 3.80 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சுமார் 10 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக அளவில் சுமார் 2.86 கோடிப்பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, கொலம்பியா போன்ற  நாடுகள் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதல் நாடாக அமெரிக்கா உள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தியாவில் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

இதுவரை அமெரிக்காவில்  80 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  71 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. ஒட்டு மொத்த உலக நாடுகளும் வைரஸ் தொற்றிலிருந்து மீள முடியாமல் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல் ஒன்றைஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது, லண்டனை சேர்ந்த லான்செட் தொற்றுநோய்கள் இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று தாக்கும் அபாயம் குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் வைரஸால் தாக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான நெவாடா மாநில இளைஞர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த  48 மணி நேரத்துக்குள் மீண்டும்  சார்ஸ் கோவி-2 விற்கான அறிகுறிகள் தென்பட்டது. அது அவருக்கு முதல் தடவையைவிட தீவிரமாக இருந்ததாகவும், பின்னர் அவர் ஆக்சிஜன் ஆதரவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேண்டியிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 4 பேருக்கு மீண்டும் வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் ஈகுவடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொரோனா  நோயாளிகளை ஆராய்ந்ததில் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலகளாவிய தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின்  நெவாடா மாநில பொதுச் சுகாதார ஆய்வகத்தில் பணிபுரிந்து வருபவரும், ஆராய்ச்சிக்கு தலைமைதாங்கும் ஆராய்ச்சியாளருமான மார்க் பண்டோரி கூறுகையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்பவருக்கு மீண்டும் நோய் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, தற்போதைக்கு இந்த வைரசுக்கு தடுப்பூசி ஏதும் உருவாக்கப்படவில்லை என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கூறமுடியாது, அதை புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவை, முதலில் ஏற்படும் நோய்த் தாக்கத்தை விட இரண்டாவது ஏற்படும் நோய்த் தாக்கத்தில் அதிக அறிகுறிகள் ஏற்படுவது ஏன் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
 

click me!