மனைவிக்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவன் !! வைரலான புகைப்படம் !!

Published : Sep 10, 2019, 08:22 PM IST
மனைவிக்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவன் !! வைரலான புகைப்படம் !!

சுருக்கம்

விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.  

கடந்த சில நாட்களுக்கு முன், கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் விமானத்துக்குள் ஒருவர் நின்று கொண்டிருக்க, அருகில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.  

மனைவி நன்றாக தூங்க வேண்டும் எனபதற்காக இந்த மனிதர் 6 மணி நேரமாக நின்று கொண்டே வருகிறார். இதுதான் உண்மையான அன்பு  என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் 

ஜான்சன். அது எந்த விமானம், எங்கிருந்து எங்கு சென்றது என்ற விவரம் ஏதுமில்லை. இதையடுத்து மனைவி மீது அவர் வைத்திருந்த அன்பை பாராட்டி பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தப் புகைப்படம் சுமார் 16 ஆயிரம் லைக்குகளையும் சுமார் 3500 ரீ ட்விட்டுகளையும் பெற்றது.

ஒரு பக்கம் கணவரின் அன்பை சிலர் பாராட்டினாலும் மறுபக்கம் அவர் மனைவி சுயநலம் கொண்டவர் என்று திட்டத் தொடங்கி விட்டனர் ட்விட்டர்வாசிகள். அதன் பின்னர் அன்பா!, சுயநலமா? என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!