
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நாசாவின் "ஹப்பிள்" தொலைநோக்கியானது அண்டம் பற்றிய அதன் வெளிப்பாடுகளால் தொடர்ந்து விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. இந்த நிலையில் அதன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள், சுமார் 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த NGC 6611 என்ற நட்சத்திரக் கூட்டத்தைக் படம்பிடித்துள்ளது.
Hubble Classic view என்று NASA விவரித்துள்ள அந்த புகைப்படம், அடர்ந்த வாயு மற்றும் சாத்தியமான நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளை சுட்டிக்காட்டி, இருண்ட தூசி திட்டுகளுக்கு இடையே பிரகாசமான-வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற நட்சத்திரங்கள் மின்னும் ஒரு மயக்கும் காட்சியை வெளியிட்டுள்ளது என்றே கூறலாம்.
இந்த அழகிய நட்சத்திர கூட்டம் M16க்குள் உள்ளது, இது ஈகிள் நெபுலா என்றும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் இளமையாக நட்சத்திர கூட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த கிளஸ்டரின் தீவிரமான புற ஊதா ஒளியானது சுற்றியுள்ள நெபுலாவை ஒளிரச் செய்கிறது. முழுவதும் காணப்படும் இருண்ட திட்டுகள் மிகவும் அடர்த்தியான வாயு மற்றும் தூசியின் பகுதிகள், ஒளியைக் கடந்து செல்வதை மறைக்கிறது.
இந்த பதிவை வெளியிட்ட சில மணிநேரங்களில், அந்த படம் சுமார் 60,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது மற்றும் மக்கள் மத்தியில் கருத்துக்களை கூற துண்டியும் உள்ளது. இதற்கு கமெண்ட் செய்த பல ரசிகர்கள் இந்த நட்சத்திர கூட்டம் மிகவும் "அழகாக" மற்றும் "கவர்ச்சிகரமானதாக" உள்ளது என்று கூறி பிரமிப்பை வெளிப்படுத்தினர்.
சுமார் 13 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த பிரபஞ்சத்தில் இன்றளவும் பல்வேறு அதிசயங்கள் நடந்து வருகின்றது. இப்பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திர கூட்டத்தை போல பலகோடி நட்சத்திர கூட்டம் இந்த அண்டத்தில் உள்ளது. அதில் நமது பூமியும், நாமும் சிறு புள்ளிகள் கூட கிடையாது என்பது தான் ஆச்சர்யம்.
பாகிஸ்தானில் கட்டு கட்டாக வீதியில் கிடந்த பணம்.. தவறாக அச்சிடப்பட்டதா.? வைரல் வீடியோ..