ஹஜ் புனித யாத்திரை ஏற்பாடுகள் சிறப்பு! சவூதி அரசுக்கு ஜாமியா ஹம்தார்த் துணைவேந்தர் பாராட்டு!

By Dinesh TG  |  First Published Jun 29, 2023, 8:33 AM IST

புதுடெல்லியின் ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முகமது அஃப்ஷர் ஆலம், தற்போது இந்த ஆண்டு 1.6 மில்லியன் முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித் யாத்திரைக்காக சவூதி அரேபியா அரசு அதிகாரிகள் செய்து வரும் ஏற்பாடுகளை மனதார பாராட்டியுள்ளார்.
 


புதுடெல்லியின் ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முகமது அஃப்ஷர் ஆலம், தற்போது இந்த ஆண்டு 1.6 மில்லியன் முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித் யாத்திரைக்காக சவூதி அரேபியா அரசு அதிகாரிகள் செய்து வரும் ஏற்பாடுகளை மனதார பாராட்டியுள்ளார்.

அரபாத் முகாமில் அவர் அரபு செய்திக்கு அளித்துள்ள பேட்டியில், கிங் சல்மான் ஹஜ் திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் (MBS) அழைத்த 1300 சிறப்பு அழைப்பாளர்களில் நானும் ஒருவராக இருந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். .

புனித மெக்கா மற்றும் மதீனாவின் பாதுகாவலராக, அரசருக்கு சில விருப்புரிமைகள் உள்ளன. பேராசிரியர் ஆலம் தெரிவித்த கருத்துகளை மேற்கொள்காட்டி அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், “வாழ்நாள் முழுவதும் புனிதமான பயணத்திற்கு என்னை அழைத்ததற்காக மன்னர் சல்மான் அவர்களுக்கு தான் நன்றி கூறுகிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இஸ்லாமியர்களிடமிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது குடும்பத்தினர், மகள் மற்றும் மனைவியுடன் அழைக்கப்பட்டேன். அல்ஹம்துலில்லாஹ் விருந்தினராக இம்முறை ஹஜ் செய்கின்றோம்” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் சவுதி அரேபியாவில் சிறந்த விருந்தோம்பலை அனுபவித்தோம். அவர்கள் அனபான ஏற்பாடுகளுடன் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எங்களை அழைத்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் அரபு அரசுக்கு நன்றி கூறுகிறோம்.” இந்த வருடாந்திர யாத்திரைக்கு மன்னர் சல்மான் சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியலில் இடம்பிடித்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக அவர் கூறினார்.

புனித பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஆலம் கூறுகையில், “நிச்சயமாக, இது ஒரு சிறந்த உணர்வு. ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மெக்காவிற்கும் மதீனாவிற்கும் செல்ல விரும்புவார்கள். எனக்கு அழைப்பிதழ் கிடைத்ததும், எனக்கு நிறைய வேலைகள் இருந்தாலும், நான் கூறியதாவது, 'இல்லை, நான் செல்ல வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. எதிர்காலத்தில் அதைப் பெறாமல் போகலாம்.’’ என்றார்.

ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலம் கூறுகையில், "அனைத்து சிவில் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன மற்றும் 24 மணிநேரமும் தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மிகவும் வெற்றிகரமான ஹஜ் யாத்திரையை உறுதி செய்ய அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

கோடையில் வண்ணமயமாக ஜொலிக்கும் செவ்வாய் கிரகம்! நாசா விண்கலம் எடுத்த கண்கவர் புகைப்படங்கள்!

ஜூன் 10 ஆம் தேதி புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்பு, மன்னர் சல்மான் இந்த ஆண்டு ஹஜ் சீசனில் பங்கேற்க 1,000 பாலஸ்தீனிய யாத்ரீகர்களுக்கு விருந்தளிக்க உத்தரவு பிறப்பித்தார். இவை இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பங்கள். தவிர, பாலஸ்தீன யாத்ரீகர்களிடம் இருந்து சவுதி அதிகாரிகள் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!