ஆடைகளை அவிழ்த்து போட்டு நிர்வாண போஸ் கொடுத்த டாக்டர்கள்..!! ஜெர்மனி நாட்டில் அதிர்ச்சி...

By Ezhilarasan Babu  |  First Published Apr 28, 2020, 6:42 PM IST

தாங்கள் பாதுகாப்பு இல்லாமல் நிர்வாணமாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் தாங்கள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதா மூத்த மருத்துவர்களில் ஒருவரான ரூபன் பெர்னாவ்  தெரிவித்துள்ளார்


கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள்  வழங்கவில்லை எனக் கூறி ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .  இது ஜெர்மன் நாட்டு மக்கள் கவனத்தை மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரை உலக அளவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது ,சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  குறிப்பாக  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் துருக்கி ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா  நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 

Latest Videos

இதுவரை வெரும் சுமார் 6 ஆயிரத்து 126 பேர் உயிரிழந்துள்ளனர் , மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ஜெர்மனியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு , இதற்கு காரணம் அந்நாட்டு மருத்துவர்களின்  அயராது உழைப்பும்,  அர்ப்பணிப்புமே காரணம் என பல உலக நாடுகள் அந்நாட்டு மருத்துவர்களை பாராட்டியுள்ளனர்.  இந்நிலையில் ஜெர்மனியில் அந்த வைரஸ் மெல்லமெல்ல சரிவை சந்தித்து வந்த நிலையில் மீண்டும் அது வேகமெடுக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் மீண்டும்  நாட்டின் மருத்துவர்கள் திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,  மருத்துவமனைகளுக்கு  வந்த மருத்துவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக  புகைப்படங்களை பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் .  இது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது . இந்நிலையில் இதுகுறித்த தெரிவித்துள்ள மருத்துவர்கள், 

வைரஸ் தாக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் தங்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் மற்றும் உடல் கவசங்கள் வழங்கவேண்டுமென தொடர்ந்து அதிகாரி கள் மற்றும் அரசிடமும் கோரிக்கை வைத்து வந்தோம் ,  ஆனால்  இதோ  மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் இதுவரையிலும் தங்களுக்கான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வந்து சேரவில்லை.  தாங்கள் பாதுகாப்பு இல்லாமல் நிர்வாணமாய் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் தாங்கள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதா மூத்த மருத்துவர்களில் ஒருவரான ரூபன் பெர்னாவ்  தெரிவித்துள்ளார் .  இன்னும் கூட நாங்கள் நெருக்கமாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்புகிறோம் . ஆனால் அதற்கு எங்களுக்கு சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லை ,  சிலர் கேட்கலாம் நிர்வாணமாக இருப்பது கூச்சமாக இல்லையா என்று , காயங்களுக்கு தையல்போட பயிற்சி பெற்றவர் மருத்துவர்கள்  நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்போது ஏன் எங்களது  முகத்தை நாங்கள் பொத்த வேண்டும் (மூடிக்கொள்ள வேண்டும்) என கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஜனவரி மாதம் பிற்பகுதியில் இருந்து ஜெர்மனியில் வைரஸ் தாக்கத் தொடங்கியது,  அன்றுமுதல்  பாதுகாப்பு கவசங்களை  உருவாக்கும் ஜெர்மன் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது ,  ஆனால் அரசால்  இதுவரை  தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை ,  கிளினிக்குகள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ,  வடிகட்டி முகமூடிகள்  கண்ணாடிகள்  கையுறைகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றில் கேட்டு அடிக்கடி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனாலும் தேவையைப் பூர்த்தி செய்யப்படவேயில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். 

 

 

click me!