நேபாள அரசியலில் திருப்பம்! என்ஜினியர் குல்மான் கிசிங் தலைமையில் இடைக்கால அரசு!

Published : Sep 11, 2025, 02:40 PM IST
Kulman Ghising (File photo)

சுருக்கம்

நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், இடைக்கால அரசாங்கத்திற்கு குல்மான் கிசிங் தலைமை தாங்குகிறார். பாலன் ஷா மற்றும் சுஷிலா கார்க்கி விலகியதைத் தொடர்ந்து, கிசிங் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை பிரபல பொறியாளர் குல்மான் கிசிங் ஏற்றுக்கொண்டுள்ளார். காத்மாண்டு மேயர் பாலன் ஷா மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி ஆகியோர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நேபாள மின்சார ஆணையத்தின் தலைவர் குல்மான் கிசிங் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த குல்மான் கிசிங்?

நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு வகித்த கிசிங், நேர்மையான மற்றும் திறமையான தலைவராகக் கருதப்படுகிறார். புதிதாகத் தேர்தல் நடைபெறும் வரை அவர் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த இருக்கிறார்.

நேபாளத்தில் சமூக வலைத்தளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்த போராட்டம் முடிவுக்கு வெற்றி அடைந்ததை அடுத்து, இடைக்கால அரசின் கவுன்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கவுன்சிலுக்கு தலைமை தாங்க மிகவும் தகுதியானவர் எனக் கருதப்பட்ட பாலன் ஷா, இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

சுஷிலா கார்க்கியும் மறுப்பு

இதேபோல், பெரும் ஆதரவைப் பெற்றிருந்த சுஷிலா கார்க்கியும், சட்ட சிக்கல்கள் மற்றும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பமின்மையை காரணம் காட்டி, போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். 70 வயதைக் கடந்த அவர், போராட்டத்தில் ஈடுபட்ட Gen Z தலைமுறையைத் திருப்திபடுத்த முடியாது என்றும் கருதப்பட்டது.

இந்நிலையில், ஒரு Gen Z இளைஞர்கள் குழு இன்று ராணுவ தலைமையகத்திற்குச் சென்று, இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் தங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வன்முறை போராட்டங்களின் எதிரொலியாக, பிரதமரும் குடியரசுத் தலைவரும் பதவி விலகிவிட்ட நிலையில், நாடாளுமன்றமும் தீக்கிரையாகி இருப்பதால் நேபாள மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார். நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப யார் பொறுப்பேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராணுவம் பொறுப்பேற்பு

செவ்வாய்க்கிழமையில் இருந்து நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், புதன்கிழமை முக்கிய பிரமுகர்கள் மற்றும் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

காத்மாண்டுவில் நடைபெற்ற Gen Z வன்முறை போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது எனவும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தீக்கிரையான வீட்டில் சிக்கி படுகாயம் அடைந்த முன்னாள் நேபாளப் பிரதமர் கனாலின் மனைவி மோசமான நிலையில் உள்ளார் என்று காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!