இது மூன்றாம் உலகப் போரில் தான் முடியும்.. ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து டிரம்ப் வார்னிங்..

Published : Dec 12, 2025, 04:09 PM IST
Trump Ukraine Russia World War III

சுருக்கம்

ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்தால் அது மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். போரில் ஏற்படும் அதிக உயிரிழப்புகள் குறித்து வேதனை தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நீடித்தால், இந்த மோதல் ஒரு மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், கடந்த மாதம் மட்டும் இந்தப் போரில் பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தொடரும் இந்தப் போர் குறித்து ஆழமான மனநிறைவின்மையையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார்.

உயிரிழப்புகள் குறித்து டிரம்ப் வேதனை

உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், "இந்தக் கொலைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... கடந்த மாதம் மட்டும் 25,000 வீரர்கள் இறந்துள்ளனர். இது நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது போன்ற விஷயங்கள் மூன்றாம் உலகப் போரில்தான் முடியும். நான் சமீபத்தில் கூட இதைத்தான் சொன்னேன். அனைவரும் இப்படி விளையாடினால், மூன்றாம் உலகப் போரில்தான் போய் முடியும், அதை நாம் காண விரும்பவில்லை," என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட சோர்வு

ரஷ்யாவும் உக்ரைனும் பின்வாங்க மறுப்பதால், சில மணிநேரங்களில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக மார்தட்டிய டிரம்ப், தற்போது இந்தப் போரை வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், சமாதானத்தை எட்டுவதில் ஏற்பட்டுள்ள மந்தநிலை குறித்து ரஷ்யா ற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பின் மீதும் அதிபர் டிரம்ப் மிகவும் விரக்தியில் இருப்பதாகக் கூறினார். வெறும் சந்திப்புக்காக மட்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவர் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

அமெரிக்கா இந்தப் போர் முடிவுக்கு வர முதன்மை மத்தியஸ்தராகச் செயல்படும் நிலையில், டிரம்ப் "எந்தப் பயனும் அளிக்காத கூட்டங்களால் சோர்வடைந்துவிட்டார்" என்றும் லீவிட் தெரிவிக்கிறார். மேலும், வெறும் வார்த்தைகள் அல்ல, முடிவுகளையே அவர் விரும்புவதாகவும் லீவிட் கூறினார்.

இருப்பினும், சமாதான முயற்சிகளில் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதிபர் டிரம்ப் புதன்கிழமை ஐரோப்பியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இத்துடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது குழுவினரும் இரு தரப்பினருடன் தற்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!
H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!