ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்து தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.
இந்நிலையில் நவாஸ் மீது நடந்து வந்த பிளாக்ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜீசீயா இரும்பு ஆலை வழக்கு என 2 வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பிளாக் ஷிப் முதலீட்டு வழக்கில் அவர் நிரபராதி என்றும் அல்அஜீசியா வழக்கில் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 7 ஆண்டு சிறையும், 25 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.