‘இந்தியாவை அணுசரிச்சு போங்க.. இல்ல வெஸ்ட் அமெரிக்காவை இழந்துடுவீங்க..! டிரம்புக்கு பின்லாந்து அதிபர் கடும் எச்சரிக்கை..!

Published : Sep 03, 2025, 11:54 AM IST
Finland President

சுருக்கம்

இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பல நாடுகளும் மேற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. மேற்கு நாடுகள் கூட்டு உரையாடல், மரியாதை, ஒத்துழைப்பை அதிகரிக்கவில்லை என்றால், புதிதாக உருவாகி வரும் மையங்கள் மேற்கத்திய நாடுகளை விட செல்வாக்கு மிக்கதாக மாறும்

"இந்தியாவுடன் மரியாதைக்குரிய நட்புறவை ஏற்படுத்தாவிட்டால், நாம் தோற்றுவிடுவோம்" என பின்லாந்து அதிபர் அலெக்ஸ் ஸ்டப் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். ஜி ஜின்பிங் சீனாவில் ஒரு இராணுவ அணிவகுப்பை ஏற்பாடு செய்து, உலகிற்கு அழிவுகரமான ஆயுதங்களைக் காட்டிய நேரத்தில் பின்லாந்து அதிபர் அமரிக்காவை எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் ஆகியோரும் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த இராணுவ அணிவகுப்புடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஜி ஜின்பிங் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இராணுவ அணிவகுப்புக்கு சற்று முன்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.

பின்லாந்து அதிபர் அலெக்ஸ் ஸ்டப் தனது அறிக்கையில், "உலகளாவிய தெற்கு, இந்தியாவுக்கு மிகவும் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து விடும். தற்போது மேற்கத்திய உலகம் பழைய உலக ஒழுங்கின் எச்சங்களைக் காப்பாற்ற முயற்சிப்பதில் மும்முரமாக உள்ளது. அதே நேரத்தில் புதிய அரசியல், பொருளாதார சக்திகள் வேகமாக உருவாகி வருகின்றன" என்று ஸ்டப் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக விதித்த 50 சதவீத வரியில் அவர் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை என்பதை அவரது அறிக்கை உணர்த்துகிறது.

ஆனால், அமெரிக்க புவிசார் அரசியல் நிபுணர் இவான் ஏ.ஃபைகன்பாம், ‘‘பின்லாந்து அதிபர் "கூட்டுறவு" மற்றும் "மரியாதைக்குரிய" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில், இந்த இரண்டு வார்த்தைகளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அகராதியில் இல்லை. எனவே, அமெரிக்கா இதை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறு அடிப்படையில் பூஜ்ஜியம் என்று நான் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

மறுபுறம், பின்லாந்து அதிபர் ஸ்டப், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தை குறிப்பாகக் குறிப்பிட்டு, “இந்த சந்திப்பு மேற்கத்திய நாடுகளுக்கு உலகளாவிய அதிகார சமநிலை மாறிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.ாங்காய் ஒத்டுழைப்பு அமைப்பு சீனா, ரஷ்யா மற்றும் பிற முக்கிய ஆசிய, மத்திய ஆசிய நாடுகளை உள்ளடக்கியது, இவை ஒன்றாக மேற்கத்திய செல்வாக்கிற்கு சவாலாக இருக்கலாம். 

இந்த சந்திப்பு வெறும் இராஜதந்திர நிகழ்வு மட்டுமல்ல. உலகளாவிய தெற்கு அதன் சொந்த சுயாதீன வெளியுறவுக் கொள்கை, பொருளாதார விருப்பங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான சமிக்ஞை. இந்தியாவும் வேகமாக வளர்ந்து வரும் பல நாடுகளும் மேற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. மேற்கு நாடுகள் கூட்டு உரையாடல், மரியாதை, ஒத்துழைப்பை அதிகரிக்கவில்லை என்றால், புதிதாக உருவாகி வரும் மையங்கள் மேற்கத்திய நாடுகளை விட செல்வாக்கு மிக்கதாக மாறும்’’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்