“இன்றைய தலைவர்களுக்கு இவர் ஒரு பாடம்” - பலமுறை மரணத்தை சந்தித்த பிடல் காஸ்ட்ரோ

First Published Nov 26, 2016, 11:59 AM IST
Highlights


கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவால இன்று மரணமடைந்தார். கடந்த 1959ம் ஆண்டு முதுல் 1976ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். அதை தொடர்ந்து, 1976 முதல் 2008ம் ஆண்டு வரை அதிபராக பதிவி வகித்தார். உலக நாடுகளில் அதிக ஆண்டுகள் தலைவராக பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு.

கியூபா நாட்டில், ஏழை மக்கள் பயன்பெற வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக இலவச கல்வியை முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருந்து, மாத்திரைகளை இதுவரை சப்ளை செய்துவருவது கியூபா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கொல்வதற்காக அமெரிக்கா சிஐஏ அமைப்பு மூலம் பலமுறை முயற்சித்துள்ளது. ஆனால் அவர், அமெரிக்காவின் அந்த முயற்சியை தவிடுபொடியாக்கினார். கடந்த 2014ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபால் பரிசு பெற்று, உலக தலைவர்கள் மத்தியில் பாராட்டு பெற்றார்.

தற்போது 90 வயது கொண்ட பிடல் காஸ்ட்ரோ, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பிடல் காஸ்ட்ரோவின் இந்த மரணம் உலக நாடுகளில் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும். எத்தனை வயதானாலும் பதவியை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார்.

click me!