பிரபல நடிகை கார் விபத்தில் பலி..! உடன் சென்ற பெற்றோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

Asianet News Tamil  
Published : Jan 17, 2018, 03:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பிரபல நடிகை கார் விபத்தில் பலி..! உடன் சென்ற பெற்றோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

சுருக்கம்

familiar actress died in car accident

கார் விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிதாபமாக உயிரிழந்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

29  வயதான ஜெசிகா பால்கோல்ட், சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்றுள்ளார்.அப்போது எதிரே வந்த கார்,இவர் சென்ற கார் மீது வேகமாக மோதியது. அதில் காரில் பயணம் செய்த நடிகை மற்றும் அவரது பெற்றோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து தீவிர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் பரிதாபமாக இறந்தனர்.

நடிகை ஜெசிகா பால்கோல் ஆவது உயிர் தப்புவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தால் ஹாலிவுட் வட்டாரமே சோகத்தில் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!