கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என தகவல்..!! சீனாவுக்கு ஆப்பு நிச்சயம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2020, 12:39 PM IST
Highlights

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்தது, ஆனால் தேர்தல் முடிவுகள் அதை பொய்யாக்கியது என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த முறை அப்படியே அது நடக்கும் என்றும், மீண்டும் தான் ஜனாதிபதியாவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்-3 ஆம் தேதி நடைபெற உள்ளது.  தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் இதில் பின்தங்கி இருப்பதாக கூறப்பட்டாளும், மீண்டும் அவரே ஆட்சியை கைப்பற்றுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனா வைரஸ் கொடூர தாண்டவமாடி வருகிறது. இந்த பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடன் களம் காண்கிறார். தேர்தல் நெருங்கி வருவதால் அமெரிக்காவில் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனைவிட பின்தங்கி இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

அதே நேரத்தில் கொரோனா வைராஸை மையமாக வைத்து  ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா வைரஸை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முறையாகக் கையாளவில்லை என்றும், அதனால் அமெரிக்காவில் பொருளாதார சரிவு, வேலை இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாக ஜோ பிடன் ட்ரம்பை விமர்சித்து வருகிறார். எனவே இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்திருப்பதால், அவரின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  பல்வேறு முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது,  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என பெறுப்பேற்க வைப்பது,  சீனா மீது பொருளாதார நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார். கருத்துக் கணிப்பு முடிவுகளை தான் ஒருபோதும் நம்புவதில்லை என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்தது, ஆனால் தேர்தல் முடிவுகள் அதை பொய்யாக்கியது என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த முறை அப்படியே அது நடக்கும் என்றும், மீண்டும் தான் ஜனாதிபதியாவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கருத்துக்கணிப்புகள் டிரம்புக்கு எதிராகவே அமைந்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல்  பிரச்சாரம் வேகமெடுத்துள்ள நிலையில் ட்ரம்ப்பின் பிரச்சாரத்தின் மக்கள் கூட்டம் உற்சாகம் அதிகரித்திருப்பதாகவும், ஜோ பிடன் பிரச்சாரத்தில் அது இல்லை எனவும் கூறப்படுகிறது. அரிசோனா, புளோரிடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய சவால் நிறைந்த மாகாணங்களில், ஜோபிடனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு இந்த தொகுதிகளில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் நடத்தப்படும் கருத்து கணிப்பில் ஜோ பிடனை விட அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் பின்தங்கியுள்ளார். ஆனாலும் கருத்துக்கணிப்புகளை எல்லாம் மீறி அவர் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் வாக்குகளை விட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. 
 

click me!