பேஸ்புக் பயனாளிகள் தங்களது போஸ்டுகளில் இசையையும் சேர்க்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான வலைதளமாக இருப்பது பேஸ்புக்தான்.
பேஸ்புக் பயனாளிகள் தங்களது போஸ்டுகளில் இசையையும் சேர்க்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான வலைதளமாக இருப்பது பேஸ்புக்தான். வாட்ஸ் ஆப்பை எல்லோரும் பயன்படுத்தினாலும், பேஸ்புக்கில் படங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து, லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளுவதே இளசுகளின் நோக்கமாக உள்ளது.
இதனால், கருத்து மழையும், செல்ஃபி மழையும் பேஸ்புக்கில் பஞ்சமில்லாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இசை மழையையும் பொழியவைக்க முடிவு செய்துள்ளது பேஸ்புக். ஆம்! பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் கருத்துகள், போட்டோ மற்றும் வீடியோ போஸ்டுகளுடன் இசையையும் இணைக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆப்சனை பேஸ்புக் நிறுவனம் தற்போது சேர்த்துள்ளது.
இந்த வசதியை பெற வேண்டும் என்றால், முதலில் போட்டோ அல்லது வீடியோவை அப்லோடு செய்ய வேண்டும். பிறகு ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து, அங்கு இருக்கும் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான இசையை தேர்வு செய்ய வேண்டும். அல்லது, உங்களுக்கு தேவையான பாடலைக் கூட, அதில் பதிவேற்றி பயன்படுத்த முடியும். பேஸ்புக்கில் இடம்பெற்று இருக்கும் பாடலில் உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்யது கொள்ளவும்.
இந்த போஸ்ட்டில் பாடல் தலைப்பு மற்றும் பாடியவர் விவரம் போஸ்ட்டில் ஸ்டிக்கர் வடிவில் முன்பே இடம்பெற்று இருக்கும். இதில் இது மட்டும் இன்றி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மியூசிக்கலி போன்றே லிப் சின்க் லைவ் இசையை சேர்க்கும் வசதி வழங்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனமானது இசைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இத்தனை அம்சங்கள் தற்போதைக்கு குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழக்கப்பட்டு வருகின்றன. சோதனை முடிந்த பின் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பேஸ்புக்கில் படம், வீடியோ உடன் இசையை கேட்டு ரசிக்கலாம்.