கொரோனா போல புதுசா படையெடுக்கும் பெருந்தொற்று... எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்கள்!

By SG BalanFirst Published Mar 24, 2024, 9:45 PM IST
Highlights

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் குறைந்தாலும், எந்த நேரத்திலும் மற்றொரு புதிய தொற்றுநோய் தோன்றக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு மார்ச் 11, 2020 அன்று கொரோனா வைரஸ் என்றும் அழைக்கப்படும் கோவிட்-19 ஐ உலகளாவிய பெருந்தொற்றாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் தாக்கம் குறைந்தாலும், எந்த நேரத்திலும் மற்றொரு புதிய தொற்றுநோய் தோன்றக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரிட்டன் தொற்றுநோயியல் நிபுணர்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் பரவி மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

"அடுத்த தொற்றுநோய் எந்த நேரத்திலும் தாக்க வாய்ப்பு உள்ளது - அதன் தாக்கம் இரண்டு வருடங்களும் இருக்கலாம். 20 ஆண்டுகளும் இருக்கலாம். அது நீண்டதாக இருக்கலாம். நாம் விழிப்புடன், தயாராக இருக்க வேண்டும். மீண்டும் பல தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தொற்றுநோய்களுக்கான மருத்துவ விரிவுரையாளர் டாக்டர் நதாலி மெக்டெர்மாட் கூறுகிறார்.

செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? திருச்சியில் திமுகவை சரமாரியாகத் தாக்கிய ஈபிஎஸ்!

புவி வெப்பமடைதல் மற்றும் காடழிப்பு ஆகியவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் கடக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மரங்களை வெட்டுவதன் மூலம், விலங்குகள் மற்றும் பூச்சிகள் மனித வாழ்விடங்களுக்கு நெருக்கமாக நகர்கின்றன என்று டாக்டர் மெக்டெர்மாட் விளக்குகிறார். "இதன் மூலம் புதிய நோய்கள் தோன்றுவதற்கான சாத்தியம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குகிறோம்" என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) போன்ற கொசுக்கள் மற்றும் கடித்தல் மூலம் பரவும் வைரஸ்களின் பாதிப்பு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இதற்கு முன்னர் ஏற்படவில்லை என்று அவர் எடுத்துரைக்கிறார்.

கோவிட்-19 பெரும்பாலும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஏற்படும் என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், உலகளவில் 60 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் இதேபோன்ற தொற்றுநோய் 40 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகத்தைத் தாக்கியது.

1981ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி/எய்ட்ஸ், உலகளவில் 360 லட்சம் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன், 1968 இல் ஹாங்காங் காய்ச்சல் தொற்றுநோய் சுமார் 10 லட்சம் இறப்புகளை ஏற்படுத்தியது. மேலும் 1918 இன் ஸ்பானிஷ் காய்ச்சல் 500 லட்சம் உயிர்களைக் கொன்றது.

மேகதாது அணை கட்ட ரஜினி, கமல் ரெண்டு பேரும் இதைச் செய்யணும்: வாட்டாள் நாகராஜ் பேட்டி

click me!