எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்

Published : Dec 21, 2025, 07:36 AM IST
doj epstein files trump photo removed efta00000468 mystery investigation

சுருக்கம்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில், டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட கோப்பு திடீரென காணாமல் போயுள்ளது.

அமெரிக்காவில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை விவாதத்தின் மையமாக உள்ளது, அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் இருந்து திடீரென காணாமல் போன ஒரு கோப்பு. அந்தக் கோப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் இருந்ததாக கூறப்படுவது சந்தேகங்கள் மேலும் அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, DOJ எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களை பொது மக்களுக்கு வெளியிட்டது. அந்த ஆவணங்களில் EFTA00000468 என்ற குறிப்பு எண்ணுடன் ஒரு புகைப்படக் கோப்பு இருந்தது. அந்தப் புகைப்படம் திறந்த நிலையில் இருந்த ஒரு மேசை டிராயரில் காணப்பட்டதாகவும், அதில் டொனால்ட் டிரம்பின் பல புகைப்படங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில புகைப்படங்களில் அவர் இளம் பெண்களுடன் இருந்ததாகவும், மற்றொரு புகைப்படத்தில் அவரது மனைவி மெலனியாவுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சனிக்கிழமை காலை, DOJ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டவர்கள் அந்தக் கோப்பை காண முடியாமல் திணறிபோனார்கள். கோப்புகளின் வரிசையிலும் மாற்றம் ஏற்பட்டது. EFTA00000467-க்கு அடுத்ததாக இருக்க வேண்டிய EFTA00000468 காணாமல் போய், நேரடியாக EFTA00000469 மட்டும் இருந்தது. இது அந்தக் கோப்பு நீக்கப்பட்டதற்கான தெளிவான சான்று இதுவாகும்.

இதனால் அந்தப் புகைப்படம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உண்மையில், DOJ வெளியிட்ட உடனேயே பல பொதுக் காப்பகங்கள் இந்தக் கோப்புகளை ஆவணப்படுத்தியதால், அந்தப் புகைப்படத்தின் படங்கள் சில இணையதளங்களில் கிடைக்கின்றன.

இந்த விவகாரம் வெளிவந்ததும், ஜனநாயகக் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். சமூக ஊடகங்களில் அவர்கள், டிரம்புடன் தொடர்புடைய கோப்பு ஏன் நீக்கப்பட்டது, யார் இதற்குப் பொறுப்பு என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக அட்டர்னி ஜெனரலின் மௌனம் மேலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

முன்னதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்றாலும், இந்த பல கோப்புகள் திருத்தப்பட்ட நிலையில் உள்ளதாக DOJ கூறுகிறது. இருப்பினும், இந்தக் கோப்பு திடீரென மறைந்தது DOJ-யின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. EFTA00000468 இன்று ஒரு கோப்பு எண்ணைத் தாண்டி, அமெரிக்க அரசியல் மற்றும் எப்ஸ்டீன் வழக்கின் மர்மத்தின் மற்றுமொரு மையமாக மாறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..