emergency in sri lanka : இலங்கையில் 2-வது முறையாக அவசரநிலை: அதிபர் ராஜபக்சவை வறுத்தெடுத்த எதிர்க்கட்சிகள்

By Pothy Raj  |  First Published May 7, 2022, 3:23 PM IST

emergency in sri lanka : இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த அதிபர் கோத்தபய ராஜபக்ச 2வது முறையாக நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலையை அறிவித்துள்ளார். 


இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த அதிபர் கோத்தபய ராஜபக்ச 2வது முறையாக நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலையை அறிவித்துள்ளார். 

2-வது முறை

Tap to resize

Latest Videos

கடந்த 5 வாரங்களுக்குள் 2-வது முறையாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும், வழக்கறிஞர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மக்களை ராணுவம் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி அடக்கவோ அல்லதுகைது செய்யவோ இந்த அவசரநிலையால் முடியும். வன்முறை ஏற்பட்டால் தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடும் நடத்த அனுமதி வழங்கப்படும்.

மக்கள் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளதாரச் சிக்கலுக்கு காரணமாக இருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடுமுழுவதும் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், போராட்டத்தை அடக்க  பல்வேறு இடங்களில் போலீஸார் முயன்றபோது மக்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் கைகலப்பு ஏற்பட்டது.

இலங்கையின் பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க இந்தியா, சீனா, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் உதவி கோரியுள்ளது இலங்கை அரசு. ஆனால், உதவிகள் வரத்தாமதமாகி வருகின்றன. 

பொருளாதாரச் சிக்கல்

இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதையடுத்து, உணவு, மருந்துப்பொருட்கள்,  பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்ததால், அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து மாற்று அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச முயன்றும், பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுக்கிறார். ஆனால், ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் அரசியலை விட்டே ஒதுங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அடக்கவும் நேற்று இரவு 2-வது முறையாக அவசரநிலையை அதிபர் ராஜபக்ச அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமைகள் அமைப்பு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை அமைப்பு

இலங்கை மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ அமைதியான முறையில் போராடி வரும் மக்களுக்கு இந்த அவசரநிலை பிரகடனம் குறித்து அரசு விளக்க வேண்டும். இந்த அவசரநிலையால், பேச்சு சுதந்திரம், கூடுதல், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் அவசரநிலையில் பாதிக்கப்படாது என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது

பார் கவுன்சில்

இலங்கை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ அதிபர் கோத்தபய ராஜபக்ச மீண்டும் அவசரநிலையை அறிவிதித்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி அவசரநிலையை அறிவித்தநிலையில் மீண்டும் 2-வது முறையாக அறிவித்தது தேவையற்றது. தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அவசரநிலை அமையாது. மக்கள் போராட்டம், வேலைநிறுத்தம் தீவிரமாகவதை இது தூண்டிவிடும்.

அமைதியாக மக்கள் போராடி வரும்போது, அவர்களுக்கு எதிராக அவசரநிலையை பயன்படுத்தக்கூடாது, கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ கூடாது. அதேபோல போராட்டங்கள் வன்முறையாக மாறாமல், அமைதியாக நடக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது

எதிர்க்கட்சி கண்டனம்

பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவாகியே கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசாவும் அவசரநிலையை கடுமையாக எதிர்த்துள்ளார், அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தூதரகங்கள் அதிருப்தி

கொழும்பு நகரில் உள்ள கனடா தூதரகத்தின் துணைத் தூதர் டேவிட் மெக்கினன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கடந்த சில வாரங்களாக, இலங்கை முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் தங்களின் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அமைதியாக தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு நாட்டின் ஜனநாயகமே காரணம். ஆனால், எதற்காக தேவையற்று, அவசரநிலையை கொண்டுவந்தார்கள் எனப் புரியவில்லை”எனத் தெரிவித்துள்ளார்

அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதர்  ஜூலி சங் கூறுகையில் “ இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது கவலையளிக்கிறது. மக்கள் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தி வருகிறார்கள்”எனத் தெரிவித்துள்ளார்


 

click me!