அமெரிக்க கருவூலத்தில் இருந்து தங்கம் காணாமல் போனதா? எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Published : Feb 19, 2025, 02:27 PM IST
அமெரிக்க கருவூலத்தில் இருந்து தங்கம் காணாமல் போனதா? எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு!!

சுருக்கம்

அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் இருந்த 425 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் காணாமல் போனதாக எலான் மஸ்க் எழுப்பியுள்ள சர்ச்சை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோர்ட் நாக்ஸின் பாதுகாப்பு மற்றும் தங்க இருப்பு குறித்த கேள்விகளை மஸ்க் எழுப்பியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டர் மைக் லீயும் தனது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் இருந்த 425 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் காணாமல் போய் இருக்கிறது. இதை அமெரிக்க மக்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று எலான் மஸ்க் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக கடந்த ஜனவர் 20ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அரசாங்க பதவிகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். அமெரிக்க திறன் துறைக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா உரிமையாளருமான எலான் மஸ்கை டிரம்ப் நியமித்தார். இதற்கு தற்போது கடுமையான எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

எலான் மஸ்க் எக்ஸ் பதிவு:

இதற்கிடையில், அமெரிக்காவின் தங்கம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறதா? அமெரிக்க மக்களுக்கு சொந்தமான தங்க இருப்பை அவர்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து இருந்தார். எப்போதும் தங்கம் குறித்த சர்ச்சை அமெரிக்காவில் எழுவது சகஜம் தான். அது இந்த முறையும் எலான் மஸ்க் மூலம் எழுந்து இருப்பது உலகத்தின் பார்வையை திருப்பியுள்ளது.

உயர்ந்த பங்குகள்.. இருந்தாலும் நஷ்டம்! அமெரிக்காவால் ஆட்டம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்

ஃபோர்ட் நாக்ஸில் தங்கம்:

அமெரிக்காவின் முக்கிய தங்க இருப்பு ஃபோர்ட் நாக்ஸில்  வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெஸ்ட் பாயின்ட், டென்வர் மற்றும் நியூயார்க்கில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தங்கம் குறித்த சர்ச்சை எப்படி எழுந்தது என்ற சந்தேகம் வரலாம். இருப்பில் "காணாமல் போன தங்கம்" குறித்து அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவரின் எக்ஸ் பதிவிற்கு எலான் மஸ்க் பதிலளித்து இருந்தார்.  அவரது பதிலில், "ஃபோர்ட் நாக்ஸில் நேரடி வீடியோ ஒத்திகை செய்தால் அருமையாக இருக்கும்!" என்று  மஸ்க் பதில் அளித்து இருந்தார். இது பல தரப்புகளிலும் இருந்து தற்போது ஊகங்களை கிளப்பியுள்ளது.

அமெரிக்க செனட்டர் மைக் லீ

அமெரிக்க செனட்டராக இருக்கும் மைக் லீயும் தனது அனுபவத்தை கற்பனையாக பகிர்ந்துள்ளார். அதாவது தான் எப்போது ஃபோர்ட் நாக்ஸ் சென்றாலும், ''நீங்கள் இங்கே வர முடியாது இது ராணுவத்தால் அமைக்கப்பட்டது என்று ஃபோர்ட் நாக்ஸ்  கூறுமாம். அதற்கு நான் செனட்டர், வருவதற்கு தகுதி இருக்கிறது என்று கூறினாலும் அனுமதிக்காதாம். இப்படி  தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், தங்கம் இருப்பில் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தங்கம் காணாமல் போய் இருக்கிறது என்பதை யார் உறுதிபடுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஃபோர்ட் நாக்ஸ் இணையத்தில் என்ன தகவல் உள்ளது?

தங்க இருப்பு குறித்து ஃபோர்ட் நாக்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''முதன் முறையாக கடந்த 1937ஆம் ஆண்டில் ஃபோர்ட் நாக்ஸில் தங்கம் இருப்பு வைக்கப்பட்டது. கென்ட்சுகி ராணுவத்தால் 649.6 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஃபோர்ட் நாக்ஸில் 147 மில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் மற்ற தங்க இருப்பு கருவூலங்களில் இருப்பதை விட இங்குதான் அதிக தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை யாராலும் அணுக முடியாது. யாருக்கும் அனுமதியும் கிடையாது.  கென்ட்சுகியில் தங்கம் மட்டுமின்றி அமெரிக்காவின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் தரவு தெரிவிக்கிறது. 

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள், சுதந்திரம் தொடர்பான பிரகடனங்கள், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவையும் ஃபோர்ட் நாக்ஸில் தான் பாதுகாக்கப்பட்டு இருந்தது.

ஃபோர்ட் நாக்ஸ் பாதுகாப்பானது:

ஃபோர்ட் நாக்ஸ் மிகவும் பாதுகாப்பான இடம். ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உயர் பதவிகளில் இருக்கும் எந்த அதிகாரிகளாலும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது. அப்படி இருக்கும்போது உலகிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட, முன்னணி பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வாக்காளர் பதிவுக்கு நிதி ரத்து: இந்தியா மீது டிரம்ப் கடும் விமர்சனம்

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி