எலான் மஸ்க் தனது முன்னாள் காதலி கிரிம்ஸ் உடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி படுத்தியுள்ளார்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்று நூலை வால்டர் ஐசக்சன் என்பவர் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, எலான் மஸ்க் தனது முன்னாள் காதலி க்ரைம்ஸ் உடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அக்குழந்தைக்கு டெக்னோ மெக்கானிக்கஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரவிருக்கும் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் அக்குழந்தையின் பெயர், ‘டாவ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தனது முன்னாள் காதலி கிரிம்ஸ் உடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதை எலான் மஸ்க் உறுதி படுத்தியுள்ளார். குழந்தை டவ் டெக்னோ மெக்கானிக்கஸ் என்று அழைக்கப்படுவதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் (52), கிரிம்ஸ் (35) தம்பதிக்கு ஏற்கனவே X Æ A-12 என்ற 3 வயது மகனும், எக்சா டார்க் சைடெரல் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இக்குழந்தைகள், எக்ஸ் (ஆண் குழந்தை), ஒய் (பெண் குழந்தை) என அழைக்கப்படுகிறார்கள்.
கனடா நாட்டை சேர்ந்த இசைக் கலைஞரான கிரிம்ஸ் உடன் 2018ஆம் ஆண்டில் எலான் மஸ்க் டேட்டிங் செய்யத் தொடங்கினர். செயற்கை நுண்ணறிவு பற்றிய நகைச்சுவையின் மூலம் ஆன்லைனில் சந்தித்துக் கொண்ட அவர்கள் இருவருக்கும் 2020ஆம் ஆண்டில் முதல் குழந்தையான எக்ஸ் பிறந்தது. அதன்பிறகு, 2021ஆம் ஆண்டில் வாடகைத்தாய் மூலம் அத்தம்பதிக்கு, எக்ஸா டார்க் சைடெரெல் என்ற இரண்டாவது குழந்தை பிறந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
நடுவானில் செக்ஸ்! விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட தம்பதிகள்.. ஷாக்கிங் வீடியோ வைரல்..
இருப்பினும், கடந்த ஜூலை மாதம் தங்கள் மகனுடன் இத்தாலியில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். அவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டிருந்தது.
எலான் மஸ்கிற்கு இதற்கு முந்தைய உறவுகள் மூலம் ஏற்கனவே ஒன்பது குழந்தைகள் உள்ளனர். தற்போது, கிரிம்ஸ் உடன் பிறந்த 3 குழந்தைகளையும் சேர்த்து. மொத்தம் 11 குழந்தைகளின் தந்தையாகியுள்ளார் எலான் மஸ்க்.